மூடு

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில், வார்டு எண்.2 முதல் 13யிலான 12 வார்டுகளுக்கு 27.10.2025 அன்று காலை 11.00 மணியளவிலும், வார்டு எண்.1 மற்றும் 14 முதல் 24 வரையிலான 12 வார்டுகளுக்கு 28.10.2025 அன்று காலை 11.00 மணியளவிலும் சிறப்புக் கூட்டங்கள

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2025

செ.வெ.எண்:-59/2025

நாள்:-24.10.2025

பத்திரிகை செய்தி

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில், வார்டு எண்.2 முதல் 13யிலான 12 வார்டுகளுக்கு 27.10.2025 அன்று காலை 11.00 மணியளவிலும், வார்டு எண்.1 மற்றும் 14 முதல் 24 வரையிலான 12 வார்டுகளுக்கு 28.10.2025 அன்று காலை 11.00 மணியளவிலும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.

மேற்கண்ட கூட்டங்களில் நகராட்சியின் மூலம் வழங்கப்படும் சேவைகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு மற்றும் இதர சேவைகள் தொடர்பாக அந்தந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கோரிக்கைகள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே, பொது மக்கள் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.