மூடு

திண்டுக்கல் மாவட்டம், 129- ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொர்பான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025
.

செ.வெ.எண்:-78/2025

நாள்:-31.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், 129- ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொர்பான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொர்பான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அன்பு மஹாலில், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான (BLA-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ( SIR- Special Intensive Revision) தொடர்பான பயிற்சி வகுப்பு ஆத்தூர் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல் அவர்கள் தலைமையில் இன்று(31.10.2025) நடைபெற்றது.

இந்தபயிற்சி வகுப்பில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு மேற்படி பணி குறித்து பயிற்சி மற்றும் தெளிவுரைகளை வழங்கினார். மேலும் வாக்குச்சாவடி முகவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உரிய விளக்கங்கள் அளித்தார். அதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான (BLO-APP)-ஜ பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கினார்.

இந்தபயிற்சி வகுப்பில் ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.