மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2025
.

செ.வெ.எண்:-92/2025

நாள்: 22.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் 2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 96% வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் (SVEEP) கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றது. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எளிமைப்படுத்தும் வகையிலும் எதிர் வரும் 22.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 23.11.2025 (ஞாயிறுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (SIR) சிறப்பு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டது.

அதனடிப்படையில், 132- திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜான்பால் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சகாய மாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுள்ளெரும்பு அரசு மேல்நிலைப்பள்ளி, 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளாஞ்சிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, ஒட்டன்சத்திரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இடையகோட்டை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மற்றும் ஓடைப்பட்டி பஞ்சாயத்து யூனியன் தெடக்கப்பள்ளி, 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 கணக்கெடுப்பு படிவத்தினை பதிவேற்றம் செய்யும் பணிகள் சிறப்பு முகாமை இன்று (22.11.2025) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், படிவங்களை பதிவேற்றம் செய்வதை மேம்படுத்துவது குறித்தும் உரிய அறிவுரைகள் மற்றும் செய்முறை பயிற்சியினையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
22.11.2025-சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,25,767 கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) பெறப்பட்டுள்ளன. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தினை பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாம் நாளை (23.11.2025 – ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இம்முகாம்களை வாக்காளர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த முகாம்களின்போது, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.செந்தில்முருகன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி.சுவேதா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபு பாண்டியன் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

Oplus_16908288