திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அ
செ.வெ.எண்:-06/2025
நாள்:02.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02.12.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர
திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 99% வழங்கப்பட்டு, தற்பொழுது அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள். தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்து மீளப்பெறுவது 11.12.2025 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (02.12.2025) தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் காணொளிக்காட்சி ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் குடியிருப்பில் இல்லாத (Absent), இறப்பு (Death) மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் (Shifted), இரட்டை பதிவு (Double Entry) ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியல் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டு அதுகுறித்து கட்சி பிரமுகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், நிரந்தர குடிபெயர்ந்தோர் மற்றும் வருகையின்மை ஆகிய இனங்களில் எவரேனும் இருப்பின் அதன் விவரத்தினை எதிர்வரும் 05.12.2025-க்குள் தெரிவிக்குமாறும் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.