தேர்தல் கூட்டம் மற்றும் ஆய்வு
செ.வெ.எண்:-14/2026
நாள்: 08.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிகை செய்தி
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகள் நடைபெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. மேற்படி பட்டியல் மீதான வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. மேலும், சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக 01.01.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2301 வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தினால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 சிறப்பு கண்காணிப்பாளராக (Electoral Roll Observer) நியமிக்கப்பட்டுள்ள திரு.குல்தீப் நாராயண், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும் இன்று (08.01.2026) அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பாளர் அவர்களால் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) காலத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேற்படி ஆய்வுக் கூட்டத்தின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. இரா.ஜெயபாரதி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும்இ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026-க்கான சிறப்பு கண்காணிப்பாளர் அவர்களால் 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலம்ராஜக்காபட்டி கிராமம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாகம் எண்.120-க்கான வாக்குச் சாவடி மையம் மற்றும் 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லம்பட்டி கிராமம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாகம் எண்.239, 240 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாமின்போது பெறப்பட்ட படிவங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
