மூடு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026

செ.வெ.எண்: 42/2026

நாள்: 14.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அறிவிக்கையின் படி ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேற்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதள முகவரியான https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பெரியகலையம்புத்தூர் கிராமத்தில் 17.01.2026 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் உரிய விபரங்களை ஆன்லைன் மூலம் 14.01.2026-ஆம் தேதி நண்பகல் 12.00 மணி முதல் 15.01.2026 அன்று மாலை 06.00 மணிக்குள் https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதுக்கான சான்றிதழ் முதலானவற்றை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

அதேபோல், மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான பதிவுகளையும் மேற்சொன்ன https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள காளையின் உரிமையாளர்கள் https://dindigul.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளார் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் விதிகளின் படி டோக்கன் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு, டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

மேற்கண்ட விபரங்கள் இடம் பெறாத ஆன்லைன் பதிவுகள் நிராகரிக்கப்படும் எனவும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச் சீட்டு ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.