மூடு

மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் கண்காட்சி.

வெளியிடப்பட்ட தேதி : 23/01/2026

செ.வெ.எண்:-62/2026

நாள்:-22.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் விருப்பக் கண்காட்சி வருகின்ற 26.01.2026 முதல் 01.02.2026 வரை பழனி பேருந்து நிலையத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் “விருப்பக் கண்காட்சி” என்ற பெயரில் இரண்டாம் கட்டமாக பேருந்து நிலையம், பழனியில் 26.01.2026 முதல் 01.02.2026 வரை கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களும் மற்றும் வெளி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்திப் பொருட்களான பேன்சி, கைவினைப் பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், சணல் பைகள், மூங்கில் கூடைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொம்மைகள், கவரிங் பொருட்கள் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திடும் வண்ணம் உரிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், இரண்டாம் கட்டமாக பேருந்து நிலையம், பழனியில் 26.01.2026 முதல் 01.02.2026 வரை நடைபெறும் விருப்பக் கண்காட்சியில் அதிகளவில் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.