மூடு

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – “இது நம்ம ஆட்டம்”.

வெளியிடப்பட்ட தேதி : 23/01/2026

செ.வெ.எண்:-64/2026

நாள்: 22.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – “இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – ”இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ள (01.01.1991 முதல் 31.12.2009 இரண்டு தேதிகளையும் உள்ளடக்கியது). ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டியின் போது உரிய ஆவணங்கள் ஆதார் நகல் மற்றும் வயது சான்று நகல் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒருவர் தடகளப் போட்டியில் 2 பிரிவுகளிலும், குழு போட்டியில் இரண்டு விளையாட்டுக்களிலும் கலந்து கொள்ளலாம். போட்டிகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

25.01.2026 -அன்று – கபாடி, கேரம் கையுந்துப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஸ்டீரீட் கிரிக்கெட், (ஆண்கள் மட்டும்)

27.01.2026-அன்று–100 மீ, குண்டு எறிதல்,கயிறு இழுத்தல் (ஆண்கள் மற்றும் பெண்கள்),எறிப்பந்து (பெண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுப் போட்டிகள்

கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் கீழ்கண்ட இடத்தில் நடைபெற உள்ளது.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் – அரசு மேல் நிலை பள்ளி, ஆத்தூர்

வடமதுரை ஊராட்சி ஒன்றியம் – மதர் தெரசா மெ.மே.நி பள்ளி, வடமதுரை

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் – கிருஸ்டியன் கல்லூரி, ஒட்டன்சத்திரம்

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் – அரசு மே.நி. பள்ளி, தொப்பம்பட்டி

பழனி ஊராட்சி ஒன்றியம் – சுவாமி மெ.மே.நி பள்ளி, பழனி.

26.01.2026 – அன்று – கபாடி, கேரம் கையுந்துப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஸ்டீரீட் கிரிக்கெட், (ஆண்கள் மட்டும்)

27.01.2026–அன்று-100மீ, குண்டு எறிதல்,கயிறு இழுத்தல் (ஆண்கள் மற்றும் பெண்கள்),எறிப்பந்து (பெண்கள் மட்டும்).ஆகிய விளையாட்டுப் போட்டிகள்
கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் கீழ்கண்ட இடத்தில் நடைபெற உள்ளது.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்- அரசு மே.நி. பள்ளி, நிலக்கோட்டை
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் – சி.எஸ்.ஐ மே.நி. பள்ளி, வத்தலக்குண்டு
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் – அரசு மே.நி. பள்ளி, சாணார்பட்டி
நத்தம் ஊராட்சி ஒன்றியம் – து.ரை கமலம் அரசு மே.நி. பள்ளி, நத்தம்
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் – பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி

25.01.2026-அன்று – கபாடி, கேரம் கையுந்துப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்)ஸ்டீரீட் கிரிக்கெட், (ஆண்கள் மட்டும்)

26.01.2026–அன்று-100மீ, குண்டு எறிதல், கயிறு இழுத்தல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), எறிப்பந்து (பெண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுப் போட்டிகள்
கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் – அரசு ஆண்கள் மே.நி. பள்ளி, வேடசந்தூர்
கொடைக்கனால் ஊராட்சி ஒன்றியம் – பிருந்தாவன் பப்ளிக் பள்ளி கொடைக்கானல்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் – மாவட்ட விளையாட்டரங்கம் திண்டுக்கலில்

25.01.2026-அன்று- கபாடி, கேரம், கயிறு இழுத்தல் ஆண்கள் மற்றும் பெண்கள்) ஸ்டீரீட் கிரிக்கெட், (ஆண்கள் மட்டும்)

27.01.2026- அன்று– தடகளம்-100 மீ, குண்டு எறிதல், கையுந்துப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), எறிப்பந்து (பெண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுப் போட்டிகளும்.

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் – அரசு மே.நி பள்ளி, கே. இராமநாதபுரம்

26.01.2026 – அன்று- தடகளம் – 100 மீ, குண்டு எறிதல்,கயிறு இழுத்தல் கேரம் (ஆண்கள் மற்றும் பெண்கள்),எறிப்பந்து (பெண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுப் போட்டிகள்

27.01.2026 – அன்று – கபாடி, கையுந்துப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஸ்டீரீட் கிரிக்கெட், (ஆண்கள் மட்டும்).

மேற்காணும் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் போட்டி நடைபெறும் அன்று நேரடியாகவும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் போது விளையாட்டுச் சீருடையில் போட்டி நடைபெறும் நாட்களில் போட்டி நடைபெறும் இடத்தில் காலை 8.00 மணிக்கு ஆஜராக வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை தனிநபர் போட்டிகள் முதலிடம் – ரூ.3000, 2-ஆம் இடம் – ரூ.2000, மூன்றாமிடம் – ரூ. 1000, குழுப் போட்டிகள் தலா முதலிடம் – ரூ.3000, 2-ஆம் இடம் – ரூ.2000, மூன்றாமிடம் – ரூ. 1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

மாவட்ட அளவிலான போட்டிகள் 30.01.2026 முதல் 01.02.2026 வரை நடைபெற உள்ளது. கபாடி, கேரம் கையுந்துப் பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), ஸ்டீரீட் கிரிக்கெட்,(ஆண்கள் மட்டும்) 100 மீ, குண்டு எறிதல், கயிறு இழுத்தல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), எறிப்பந்து (பெண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், நேரடியாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

1. ஓவியப் போட்டி- கல்சுரல்- ஆண்கள் மற்றும் பெண்கள்

2. கோலப்போட்டி – 3 நபர்கள் ஒரு அணி- பெண்கள் மட்டும்

3. மாற்றுத்திறனாளிகள் (கை, கால் ஊனமுற்றோர்)-100மீ – ஆண்கள் மற்றும் பெண்கள்

4. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள்-குண்டு எறிதல் – ஆண்கள் மற்றும் பெண்கள்

5. மனவளர்ச்சி குன்றியோர்- 100 மீ – ஆண்கள் மற்றும் பெண்கள்

6. செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் -100 மீ – ஆண்கள் மற்றும் பெண்கள்.

மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக தொலைபேசி எண் (7401703504)-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.