வாக்காளர் தினம் – விழிப்புணர்வுப் பேரணி.
செ.வெ.எண்:72
நாள்:25.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக்கொண்ட விளம்பர வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இன்று (25.01.2026) 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக்கொண்ட விளம்பர வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து , 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 18-வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்தியக் குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போது அனைவரும் தங்களது வாக்குரிமையை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, இன்றைய தினம் 16-வது தேசிய வாக்காளர் தினவிழாவானது திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு பேரணியானது நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியானது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவுபெற்றது. இந்த விழிப்புணர்வுப் பேரணியில் அரசு அலுவலர்கள் தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக்கொண்ட விளம்பர வாகனங்களை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.திருமலை, தேர்தல் வட்டாட்சியர் (தனி) திரு.முத்துராமன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.ராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
