மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி – கிராம சபைக் கூட்டம்.
செ.வெ.எண்:-74/2026
நாள்: 26.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் இன்று (26.01.2026) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற நோக்கில் செயலாற்றி வருகிறார்கள்.
மேலும், ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் இந்த கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண்ப்பட்டுள்ளது. அதடிப்படையில், அனைத்து கிராம ஊராட்சிகளும் தற்போது சுத்தமான, சுகாதாரமான, அனைத்து நிலைகளிலும் வளரச்சி அடைந்த கிராம ஊராட்சிகளாகத் திகழ்ந்து வருகின்றன. மேலும், எந்த அளவிற்கு வளரச்சி அடைந்தாலும் நம்முடைய தேவைகள் என்பது இடத்திற்கு இடம், மக்களுக்கு மனநிலைக்கு ஏற்றாற்போல மாறுபடும். மேலும், ஒரு குடுபத்தின் தேவை என்பதும் ஆண்டிற்கு ஆண்டு மாறுபடும். இதனை கருத்திற்கொண்டு மாறுபடும் மக்களின் மனநிலைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மூலம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்இ 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டது. அதனடிப்படையில், 70 ஆயிரம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஆயிரம் வீடுகளின் கட்டுமானப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
மேலும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, 450 வீடுகள் கட்டி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டதன் பேரில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும், ஆணை பிறப்பித்துள்ளார்கள். தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.156 கோடி நிதியொதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து, கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் கலந்து கொண்டு தங்களது தேவைகளை மனுக்களாக வழங்குவதன் மூலம் தகுதியின் அடிப்படையில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும். அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே,அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.திருமலை, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.