மூடு

மாவட்ட ஆட்சித் தலைவர் – கிராம சபைக்கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026

செ.வெ.எண்:-76/2026

நாள்:-26.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று (26.01.2026) நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயலாற்றி வருகிறார்கள்.

அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் இந்த கிராமசபைக் கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து கிராம வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சாலை வசதிகள், பாதாள சாக்கடை வசதிகள், தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறார்கள். அதன்படிஇ பெண்கள் பொருளாதாரத்தில் வளரச்சி அடைய வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15.09.2023-அன்று தொடங்கி வைத்தார்கள். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை கடந்த 12.12.2025-அன்று தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 4,53,612 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலுவலர்களை பார்க்க வேண்டுமென்றால் கால தாமதம் ஏற்படும் என்பதற்காகவும், போக்குவரத்து சிரமங்கள் உள்ளிட்ட இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாக கூடாது என்பதற்காகவும், அனைத்து அரசு அலுவலர்களும் உங்கள் வீட்டை தேடி, உங்கள் ஊரை தேடி வருகின்ற திட்டமான ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ், கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆடசிப்பொறுப்பேற்ற பின்பு, கிராமங்களில் சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆடசித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ”வாக்காளர் உறுதிமொழி” மற்றும் ”ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி” ஆகிய விழிப்புணர்வு உறுதிமொழிகளை மாவட்ட ஆடசித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அரசு அலுவலர்கள் மக்கள் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி அவர்கள், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர் அவர்கள், உதவி திட்ட அலுவலர் திரு.பிரகாஷ் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.இரா.மகுடபதி, ஊராட்சி செயலர் திரு.மாரிமுத்து அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.