அறிவியல் விழா – ஜி.டி.என். கலைக் கல்லூரி.
செ.வெ.எண்: 85/2026
நாள்: 30.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
ஜி.டி.என். கலைக் கல்லூரியில் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு சிட்டி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற பெருவெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்
தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஜி.டி.என். கலைக் கல்லூரியில் ‘மாநில அளவிலான அறிவியல்இ தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு சிட்டி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற பெருவெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 29.01.2026-அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நேற்று (28.01.2026) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் திருவிழா வருகின்ற 03.02.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் தான் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் புதிக சிந்தனைகளோடும், ஆக்கப்பூர்வமான நோக்கத்தோடும் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை தூண்டும் வகையில் இன்றைய தினம் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தாய்மொழியாகிய தமிழ்மொழியை கற்பதன் மூலம் நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளலாம். அதனைப்போன்று, கணிதத்தை கற்பதன் மூலம் தர்க்க ரீதியில் சிந்தப்பதற்கான ஆற்றல் வளரும். மேலும், அறிவியலை கற்பதன் மூலம் புதிது, புதிதாக சிந்தனைகள் வளரும். எனவே, நமது தாய்மொழியாகிய தமிழ் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு கணிதமும், அறிவியலும் முக்கியமாகும்.
தற்போது, அறிவியல் தொழில்நுட்பத்தில் புதிது, புதிதாக கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்து கொண்டிருக்கும் அறவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவ-மாணவியர்களாகிய தாங்கள் தங்களுடைய அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், இளைஞர்களுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு முன்னெடுப்பு நிகழ்வாக இந்த அறிவியல் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வருங்காலத்தில் படித்த இளைஞர்கள் நல்ல நிலையில் இருப்பதற்கும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்கும் தங்களுடைய திறமைகளை ஆக்கப்பூர்வமான வகையில் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், அறிவியல் மற்றும் புத்தாகக்கத் திருவிழாவிற்கு இதுவரை சுமார் 12,000 பள்ளி மாணவ, மாணவியர்களும், 8 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவியர்களும் பங்கேற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு சிட்டி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற பெருவெடிப்புக் கொள்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.
இவ்விழாவில், கார்டெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு.மாறன் நாகராஜன், சிட்டி நிர்வாக இயக்குநர் திரு.பிரேமானனந்த், ஜி.டி.என் கல்லூரி முதல்வர் திரு.சரவணன், ஸ்டார்டப் தமிழ்நாடு மதுரை ஒருங்கிணைப்பாளர் திரு.சக்திவேல் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.