எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியில் சென்னை SRM பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இயக்
செ.வெ.எண்: 99/2026
நாள்: 01.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியில் சென்னை SRM பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் R.கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சயில் இன்று (01.02.2026) சென்னை SRM பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் R.கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த, அறிவியல் திருவிழாவில் இஸ்ரோவிலிருந்து நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 120 அரங்குகள், பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள், சூரிய ஆய்வகம் (Solar Observatory), கோளரங்கம் (Planetarium), கருத்தரங்க நிகழ்ச்சிகள் (தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் புதுமைகள் குறித்த உரை) உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்றைய தினம் அறிவியல் திருவிழாவிற்கு இன்றைய படைப்பை வழங்க வந்திருக்கும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை வரவேற்று வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெயர்களை பதிவு செய்து அவர்களின் படைப்புகளையும் பதிவு செய்து அவர்கள் இருப்பிடங்களில் அவர்களது படைப்புகளை காட்சிப்படுத்த வழிகாட்டும் பணியில் பதிவுக்குழு தன்னார்வலர் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, சென்னை SRM பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் R.கார்த்திகேயன் அவர்கள் தெரிவித்ததாவது:-
நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது 75 கல்லூரிகள் இருந்தது. கலந்தாய்வை தவர விட்டால் வேறு கல்லூரியில் சேர முடியாது. கல்லூரி படிப்பு என்பது கல்லூரியில் சேர்ந்து 4 வருடம் படிப்போம். 8-வது செமஸ்டரில் வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்ய பல்வேறு நிறுவங்களிலிருந்து வருவார்கள். அந்த வகையில் 4 பெரிய நிறுவனங்கள் எங்களை தேர்வு செய்ய வருவார்கள்.
அதற்கு பின்னர் ரிசல்ட் வைத்து தேர்வு செய்தார்கள். ரிசல்ட் வந்துவிட்டால் ஒருவாரத்திற்கு எங்களுக்கு அதிகமான வேலை இருக்கும். பின்னர் வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்துவிடும். எவ்வளவு பேக்கேஜ் மற்றும் மாணவர்களை தேர்வு செய்தோம் என்ற பணிகள் நடைபெறும். இப்பணிகள் NIRS வருவதற்கு முன்னர் நடைபெற்றது. NIRS வந்தற்கு பின்னர் ஆராய்ச்சி வந்துவிட்டது. இதில் IIT, NIT-யில் இருந்து ஒய்வு பெரும் வயதில் இருப்பார்கள். நான் கடந்த 10 வருடங்களாக இப்பணியில் இருந்து வருகிறேன். கடந்த 5 வருடங்களில் 82 சதவிகிதம் கம்பியூட்டர் படித்தவர்களும், அதற்கு அடுத்து எலெக்ரானிக்ஸ் படித்தவர்களுக்கும் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. நல்ல திறமையான மாணவர்கள் நல்ல நிறுவனத்தில் பணிக்கு சென்று விடுகிறார்கள். எங்களுக்கு 4 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. நாங்கள் அனைவருக்கும் நல்ல முறையில் அனைத்து மாணவர்களுக்கும் படிக்க வைக்கின்றோம். எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பைத்தான்கற்பித்து தருகிறோம். முதல் வருடமே பைத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என சென்னை SRM பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் R.கார்த்திகேயன் அவர்கள் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, அறிவியல் திருவிழாவில் காலை 10 மணியிலிருந்து 9-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் படைப்புகளை பார்வையிட வந்திருக்கும் பள்ளியின் பெயர், மாணவர்களின் எண்ணிக்கை, பொறுப்பு ஆசிரியர்கள் பெயர் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட பதிவுகளை ஆசிரியர்கள் பதிவு செய்து கொண்டனர். மேலும், பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து பார்வையிட வரும் மாணவர்களை முறையாக சீர்படுத்தி அவர்களை அமைதியாக காணும் முறையில் கட்டுப்பாட்டு குழு மற்றும் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் இணைந்து வழிநடத்தி வருகின்றனர். இன்றுவரை அறிவியல் திருவிழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர் .
மேலும், திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ இன்னும் இரண்டு நாட்கள்(02.02.2026, 03.02.2026) மட்டுமே நடைபெறும் எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இன்றை தினம் நடைபெற்று வரும் அறிவியல் திருவிழாவில் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் முனைவர் M.கிறிஸ்பின் கார்த்திக் அவர்கள், காரைக்குடி முதன்மை விஞ்ஞானி, மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் முனைவர் D..ஜோனஸ் டேவிட்சன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.