கால்நடை பராமரிப்புத் துறை
செ.வெ.எண்: 05/2026
நாள்: 03.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வருகின்ற 14.02.2026 வரை கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இருவார சிறப்பு முகாமானது அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் வருகின்ற 14.02.2026 வரை கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இருவார சிறப்பு முகாமானது அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது.
இது சமயம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி வளர்க்கும் பயனாளிகள் அனைவரும் அவர்களது கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கால்நடை நிலையங்களில் தங்கள் கோழிகளுக்கு நோய்த்தடுப்பூசி செலுத்தி கோழிக்கழிச்சல் நோய் வராமல் பாதுகாத்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.