தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – காலிப் பணியிடங்கள்.
செ.வெ.எண்: 12/2026
நாள்: 06.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திண்டுக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆத்தூர், வத்தலக்குண்டு, திண்டுக்கல், குஜிலியம்பாறை, கொடைக்கானல், நத்தம், சாணார்பட்டி, தொப்பம்பட்டி மற்றும் வேடசந்தூர் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 16.02.2026 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி :
ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது மூன்று மாதம் Ms-Office சான்றிதழ் படிப்பு (அல்லது) இளங்கலை கணினி அறிவியல் (B.Sc (CS) அல்லது இளங்கலை கணினி பயன்பாட்டில் (BCA) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது :
30 வயதிற்க்குட்பட்டவர்கள்
அனுபவம் :
சுய உதவிக்குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இடம் :
காலிப்பணிடம் உள்ள வட்டாரத்திற்குட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
நிபந்தணைகள் :
நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் மற்றும் பிற காரணங்களுக்காக முந்தைய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். புது வாழ்வுத் திட்டம் மற்றும் பிற மாநில அரசுத் திட்டங்கள், திட்டப்பணிகள் செயல்பாடுகளிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கவோ அல்லது நீக்கப்பட்டியிருக்கவோ கூடாது.
மேற்படி தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்-624 004 என்ற முகவரி மற்றும் dpiu_dgl@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் -16.02.2026 மேலும். விவரங்களுக்கு 0451-2460050 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.