மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2026

செ.வெ.எண்:-25/2026

நாள்:-10.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டவாடி ஊராட்சி, சிந்தலப்பட்டி ஊராட்சி, அம்பிளிக்கை ஊராட்சி, காப்பிளியப்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டவாடி ஊராட்சி, சிந்தலப்பட்டி ஊராட்சி, அம்பிளிக்கை ஊராட்சி, காப்பிளியப்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (10.02.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்துஇ அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

. . .
. . .

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நெல் மழையின் காரணமாக நனையக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்பட்டு நெல் சேமிக்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சமயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைப்பதற்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.05.00 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாய பெருங்குடி மக்கள் சாகுபடி செய்யப்பட்ட முருங்கையினை பதப்படுத்தி வைப்பதற்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த பதப்படுத்தும் கிடங்கு அமைப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 07.01.2026-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும், ஆணை பிறப்பித்துள்ளார்கள். தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அடிப்படைத் தேவைகளான சாலை வசதிகளை ரூ.1088 கோடி நிதியொதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 12.02.2026-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மனுக்கள் அளிக்கலாம்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை அரவக்குறிச்சி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் சுத்திகரிக்கப்பட்டு சின்னக்காம்பட்டி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படவுள்ளது. இதில் பணிகள் நிறைவு பெற்றுள்ள பகுதிகளுக்கு முதற்கட்டமாக வருகின்ற 13.02.2026-ஆம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, மண்டவாடி ஊராட்சிக்குட்பட்ட ரோட்டுப்புதூர் பிரிவு முதல் சின்ன மண்டவாடி மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி வரை ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைக்கும் பணி, பெரிய மண்டவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி, சின்ன மண்டவாடி முருகன் வீடு முதல் பெருமாள் வீடு வரை ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெரிய மண்டவாடி ஜெயராம் வீடு முதல் சக்திவேல் வீடு வரை மற்றும் மாரியப்பன் வீடு முதல் அம்பிகா வீடு வரை ரூ.3.32 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, நவக்கானி தார்ச்சாலை முதல் கிழக்கு தங்கவேல் தோட்டம் வரை ரூ.50.59 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி, கள்ளிமந்தையம் – ஓடைப்பட்டி சாலையில் இருந்து மெட்ராஸ்காரர் தோட்டம் வரை ரூ.39.56 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி, ஓடைப்பட்டி – கள்ளிமந்தையம் ரோட்டில் இருந்து முத்துசாமி தோட்டம் வரை ரூ.43.75 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு ரூ.151.72 இலட்சம் மதிப்பீட்டிலும்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, ஓடைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, வெங்கிடாபுரம் மணியகாரர் இளமுருகன் வீடு முதல் பெரியசாமி
வீடு வரை ரூ.2.54 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கும் பணி, கொங்கபட்டி கிழக்கு பகுதியில் ரூ.2.54 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும்
பணிஇ கிருஷ்ணாபுரம் பொன்னுசாமி வீடு முதல் பாலாஜி வீடு வரை ரூ.1.75 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதித்தல் பணி, கிருஷ்ணாபுரம் முருகன் வீடு முதல்
தார் சாலை வரை ரூ.1.63 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதித்தல் பணி,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, ஓடைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, பழனிகவுண்டன்புதூர் கிராமத்தில் கருப்பன் வீடு முதல் மெயின் ரோடு வரை ரூ.9.44 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பொன்னியா கவுண்டன் வலசு கலையரங்கம் முதல் பாஸ்கரன் வீடு வரை ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வெங்கிடாபுரம் குண்டல பெருமாள் கோவில் செல்லும் தார் சாலையிலிருந்து வீரக்குமார் வீடு வரை ரூ.6.93 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வெங்கடாபுரம் பேரூரம்பன் கோவில் அருகில் பெரிய ஓடையின் குறுக்கே ரூ.11.14 இலட்சம் மதிப்பீட்டில் குழாய் தரைப்பாலம் அமைக்கும் பணி, அக்கரைப்பட்டி ஊர் பன்னாடி பொன்னுசாமி தோட்டம் அருகில் ரூ.5.42 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி, ஓடைப்பட்டி போஸ் வீடு அருகில் ரூ.5.42 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய தடுப்பணை அமைக்கும் பணி, மாயக்கண்ணன் வீடு முதல் முதலாளி ஆனந்தன் வீடு வரை ரூ.2.49 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, முல்லை நகர் கிழக்கு வீதியில் ரூ.2.49 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கொங்கபட்டி கே.எஸ் வீட்டு முன்புறம் முதல் சின்னஓடை வரை ரூ.1.94 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கொங்கபட்டி சுப்பிரமணி (செங்காடு) வீடு முதல் கிருஷ்ணசாமி வீடு வரை ரூ.2.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு ரூ.65.95 இலட்சம் மதிப்பீட்டிலும்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சிந்தலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, சிந்தலப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் ரூ.56.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணியினையும் மற்றும் ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலக்கூறு 14-வது, 15-வது நிதிக்குழு மானியம் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.95 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கும் என மொத்தம் ரூ.73.45 இலட்சம் மதிப்பீட்டிலும்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அம்பிளிகை ஊராட்சிக்குட்பட்ட, அம்பிளிக்கையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் ரூ.56.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணி, முருகேசன் வீடு முதல் சேமலை வீடு வரை ரூ.4.16 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதித்தல் பணி, வடக்கு தெரு வஞ்சர வேல் வீடு முதல் ஓடை வரை ரூ.4.16 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, சாந்திபுரம் செரியன் நகரில் ரூ.5.55 இலட்சம் மதிப்பீட்டில் மூடியுடன் கூடிய புதிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, பூலாம்பட்டி மேற்கு வீதியில் தார்சாலை முதல் பெருமாள் வீடு வரை ரூ.5.57 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதித்தல் பணி, அம்பிளிகை பொட்டிக்காம்பட்டி சாலை முதல் ஆலயகவுண்டன்பட்டி சாலை வரை (1.6 கி.மீ) ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டப் பணி, அம்பிளிக்கை வடக்கு சுடுகாடு செல்லும் பாதையில் ரூ.5.82 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பூலாம்பட்டி மேற்கு வீதியில் அம்சவள்ளி வீடு முதல் செல்லமுத்து வீடு வரை ரூ.2.78 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, பிட்டர் கணேசன் வீடு முதல் மோகன் வீடு வரை ரூ.6.11 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பூலாம்பட்டியில் மெயின் ரோடு முதல் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி வரை ரூ.1.40 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, அம்பிளிகை தெற்கு ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு ரூ.129.55 இலட்சம் மதிப்பீட்டிலும்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட, தங்கச்சியம்மாபட்டியில் பூக்கடை முதல் சமுதாயக் கிணறு அருகில் ரூ.1.21 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, ஆர்.எஸ் நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலைத்தொட்டி முதல் ஆர்.எஸ் நகர் குடியிருப்பு வரை ரூ.1.62 இலட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி, செங்காடு தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து கிழக்கு காளியம்மன் கோவில் வரை ரூ.4.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஜிஐ பைப் லைன் அமைக்கும் பணி, செங்காடு ருக்குமணி வீடு முதல் மெம்பர் கிருஷ்ணசாமி வீடு வரை ரூ.7.74 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கன்னிமார்கோவில் ராஜேந்திரன் தோட்டம் செல்லும் சாலையில் சடையன்குளம் ஓடையில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு ரூ.25.02 இலட்சம் மதிப்பீட்டிலும்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், காப்பிளியபட்டி ஊராட்சிக்குட்பட்ட, காப்பிளியபட்டியில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலக்கூறு 14-வது, 15-வது நிதிக்குழு மானியம் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.20.99 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கும், சூரப்பநாயக்கன்பட்டி நல்லதம்பி தோட்டம் முதல் காளிச்சாமி தோட்டம் வரை ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு ரூ.30.99 இலட்சம் மதிப்பீட்டிலும்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், காவேரியம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட, காவேரியம்மாபட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் ரூ.56.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணி, காவேரியம்மாபட்டி மெயின் ரோடு முதல் மேற்கு மயிலாத்தாள் வீடு வரை ரூ.6.33 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பாப்பா சின்ன வேலன் வீடு முதல் சேவை மையம் வரை ரூ.4.99 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, தரைமட்ட தொட்டி வீடு முதல் தார் சாலை வரை ரூ.4.43 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெரியசாமி வீடு முதல் தெற்கு பூபதி வீடு வரை ரூ.5.82 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெரியசாமி வீடு முதல் ரேசன் கடை வரை ரூ.1.66 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெரியசாமி வீடு முதல் தங்கராஜ் வீடு வரை ரூ.2.77 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு ரூ.82.50 இலட்சம் மதிப்பீட்டிலும்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், லெக்கையன்கோட்டை ஊராச்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கழிவுநீர் வாய்க்கால், புதிய பைப் லைன் சிமெண்ட் சாலை, தடுப்பு சுவர், வண்ணகற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ.56.89 இலட்சம் மதிப்பீட்டில் என ஆக மொத்தம் ரூ.6.46 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், காப்பிளியபட்டியில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை, கிருஷ்ணகவுண்டன்புதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.94.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 27 கலைஞர் கனவு இல்லம் வீடுகள் மற்றும் அக்ஷயா பள்ளி அருகில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடம் என மொத்தம் ரூ.118.06 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், காவேரியம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட, காவேரியம்மாபட்டியில் ரூ.9.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இராயக்கவுண்டன்புதூர் பகுதி நேர நியாய விலைக்கடை ஆக மொத்தம் ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சிந்தலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, சிந்தலப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்த நிகழ்ச்சியில் 78 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சய்காந்தி, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீராகவ் பாலாஜி, மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.சிற்றரசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பிரபாகரன்இ வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.