மூடு

தேர்தல் ஆய்வுக் கூட்டம் (தேர்தல் பட்டியல் பார்வையாளர்)

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2026

செ.வெ.எண்:-32/2026

நாள்:-11.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 (Electoral Roll Observer) பார்வையாளர் திரு.எம்.கோவிந்தராவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர்பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் நடைபெற்று வருகின்றது.

இந்நேர்வில், இந்திய தேர்தல் ஆணையத்தினால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 (Electoral Roll Observer) பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.எம்.கோவிந்தராவ்,இ.ஆ.ப., அவர்களால் இன்று(11.02.2026) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மேற்படி ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் கலந்துகொண்டனர். மேற்படி ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வாக்காளர் பதிவு அலுவர்களுக்கு தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 குறித்து வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.