மூடு

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2026

செ.வெ.எண்:-33/2026

நாள்:-11.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் (2026) நடைபெறுவதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக்கொண்ட விளம்பர வாகனங்கள் 25.01.2026 முதல் சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, வாக்காளர் பொதுமக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறேன்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.