சுகாதாரம் – ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை -மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம்
செ.வெ.எண்:-56/2026
நாள்: 18.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிகை செய்தி
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகள் கொண்ட மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (ECRC) 29.06.2025-அன்று அமைக்கப்பட்டுள்ளது. மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் மருத்துவ பயனாளிகளுக்கு உணவு, தங்கும் வசதி, தேவையான சிகிச்சை, மாதத்தில் ஒரு முறை சமூக ஒருங்கிணைப்பு புத்துணர்வு/சுற்றுலா பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. எனவே, மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடத்தில் உலாவும் வீடற்ற, ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளர்களை மீட்டு மீட்பு மையத்தில் சேர்க்க அவசர கிசிச்சை மற்றும் மீட்பு மையம் (ECRC) Helpline எண்.82205 65598-க்கு தொடர்பு கொள்ளலாம்.
மேலும், திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட மனநலத் திட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளர்களுக்கு மருத்துவ உதவி பெறுவதற்கு மாவட்ட மனநலத் திட்டம் Helpline எண்.70103 83872-க்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.