மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் – அடிக்கல் நாட்டி மற்றும் நிறைவு செய்யப்பட்ட திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
செ.வெ.எண்:-68/2026
நாள்:-25.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.5.99 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.9.52 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.5.99 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.9.52 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (25.02.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
![]() |
![]() |
![]() |
![]() |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 துவக்கி வைத்தார்கள். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு வழங்கினார்கள். தற்போது, இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10 ஆயிரம் முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 63 ஆயிரம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் மகளிர் உரிமைத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 13.02.2026-அன்று மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர் வங்கிக் கணக்கில் ரூபாய் 5,000 பற்று வைக்கப்பட்டது. இதனால் மகளிர் உரிமைத்தொகை பெறும் அனைத்து பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகையினை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 கோடியே 22 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் கடந்த
08.01.2026-அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 1287 நியாயவிலைக்கடைகளின் மூலமாக 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.208.24 கோடி வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3256 புதிய பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 1 நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக நிறைவு பெற்றுள்ள பணிகளை கடந்த 13.02.2026-ஆம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, கே.கீரனூர் ஊராட்சிக்குட்பட்ட இடையன்வலசில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும், மல்லீஸ்வரத்தில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும், குத்திலுப்பை ஊராட்சியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் சமையல் கூடத்தினையும், குத்திலுப்பை ஊராட்சியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற் கூடத்தினையும், குத்திலுப்பை ஊராட்சிக்குட்பட்ட அத்தப்பன்பட்டியில் ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும், குத்திலுப்பை ஊராட்சியில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினையும், அரசப்பிள்ளைபட்டி ஊராட்சியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தையும், காளாஞ்சிபட்டி ஊராட்சியில் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், கேதையுறும்பு ஊராட்சிக்குட்பட்ட தேவச்சின்னாம்பட்டி கிராமத்தில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற் கூடத்தினையும், கேதையுறும்பு ஊராட்சியில் ரூ.29.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தையும்,
கேதையுறும்பு ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலைக் கடையினையும், கேதையுறும்பு ஊராட்சியில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில்
புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தையும், எல்லப்பட்டி ஊராட்சியில் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், எல்லப்பட்டி ஊராட்சியில் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தையும்,
எல்லப்பட்டி ஊராட்சியில் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தையும், எல்லப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரில் ரூ.642.46 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 182 கலைஞர் கனவு இல்லம் வீடுகளையும் என மொத்தம் ரூ.9.52 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, மண்டவாடி ஊராட்சிக்குட்பட்ட சின்னமண்டவாடி – வெள்ளியன்வலசு குளம் சாலை முதல் பி.ஜி வலசு ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு வரை ரூ.8.24 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, மண்டவாடி ஊராட்சிக்குட்பட்ட கள்ளிமந்தையம் – ஓடைப்பட்டி சாலை முதல் மாயவன் கோவில் வரை ரூ.17.93 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, மண்டவாடி ஊராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணி, கே.கீரனூர் ஊராட்சியில், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலக்கூறு, 14-வது நிதிக்குழு மான்யம், சிறப்பு நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ், ரூ.26.16 இலட்சம் மதிப்பீட்டில் 5 திட்டப்பணிகளுக்கும், செரியன் நகர் – கள்ளிமந்தையம் சாலை முதல் தெற்கு ஆதிதிராவிடர் குடியிருப்பு மயானம் வரை ரூ.24.16 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, கள்ளிமந்தையம் சாலை முதல் தட்டான் கோவில் வரை ரூ.16.20 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, கே.கீரனூர் – மிராஸ் நகர் சாலை முதல் கருப்பணசாமி கோவில் வரை ரூ.7.84 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, பெருமாள்கவுண்டன்வலசு சந்திரன் தோட்டம் முதல் மேற்கு குளம் வரை ரூ.15.32 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, குத்திலுப்பை ஊராட்சியில் குத்திலுப்பை – ஐ.வாடிப்பட்டி சாலை முதல் வீரக்குமார் கோவில் வரை ரூ.14.33 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, ஐ.வாடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இடையகோட்டை கள்ளிமந்தையம் சாலையிலிருந்து கானகத்து குளம் வரை ரூ.20.75 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி,
குத்திலுப்பை ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலக்கூறு, 14-வது நிதிக்குழு மான்யம், பராமரிப்பு பணி, சிறப்பு நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ், ரூ.14.42 இலட்சம் மதிப்பீட்டில் 4 திட்டப்பணிகளுக்கும், அரசப்பிள்ளைபட்டி ஊராட்சியில் குழந்தைவேலப்பர் கோவில் முதல் தெற்கு ராமசாமி தோட்டம் வரை ரூ.11.37 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, காவேரியம்மாபட்டி ஊராட்சியில் பெரியகரட்டுப்பட்டி – காவேரியம்மாபட்டி சாலை முதல் பை-பாஸ் வரை ரூ.24.41 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, காவேரியம்மாபட்டி ஊராட்சியில், காவேரியம்மாபட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு வரை ரூ.20.98 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, அரசப்பிள்ளைபட்டி ஊராட்சியில் நகர்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் 6 திட்டப்பணிகளுக்கும், அத்திக்கோம்பை ஊராட்சியில் சங்கபிள்ளைபுதூர் சாலை முதல் அத்திக்கோம்பை ஆதிதிராவிடர் குடியிருப்பு மயானம் வரை ரூ.14.90 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, அத்திக்கோம்பை ஊராட்சியில் ராஜுவ்காந்தி நகர் முதல் தட்சிணாமூர்த்தி தோட்டம் வரை ரூ.31.62 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, அத்திக்கோம்பை ஊராட்சியில் நகர்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் 10 திட்டப்பணிகளுக்கும்,
லெக்கையன்கோட்டை ஊராட்சியில் நகர்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் 6 திட்டப்பணிகளுக்கும், காளாஞ்சிபட்டி ஊராட்சியில், வெரிப்பூர்-மார்க்கம்பட்டி சாலை முதல் ரங்கவலசு வரை ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, காளாஞ்சிபட்டி ஊராட்சியில், வடமதுரை-ஒட்டன்சத்திரம் சாலை முதல் திருமலை கார்டன் வரை ரூ.23.30 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, காளாஞ்சிபட்டி ஊராட்சிக்குட்பட்ட பழைய காளாஞ்சிபட்டி விநாயகர் கோவில் முதல் மயானம் வரை ரூ.17.90 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, காளாஞ்சிபட்டி ஊராட்சியில், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலக்கூறு, 14-வது நிதிக்குழு மான்யம், சிறப்பு நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ், ரூ.24.32 இலட்சம் மதிப்பீட்டில் 6 திட்டப்பணிகளுக்கும், கேதையுறும்பு ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலக்கூறு, 14-வது நிதிக்குழு மான்யம், சிறப்பு நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ், ரூ.24.86 இலட்சம் மதிப்பீட்டில் 10 திட்டப்பணிகளுக்கும், ஜோகிபட்டி ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலக்கூறு, 14-வது நிதிக்குழு மான்யம், சிறப்பு நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ், ரூ.14.52 இலட்சம் மதிப்பீட்டில் 6 திட்டப்பணிகளுக்கும், எல்லப்பட்டி ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலக்கூறு, 14-வது நிதிக்குழு மான்யம், சிறப்பு நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ், ரூ.44.71 இலட்சம் மதிப்பீட்டில் 6 திட்டப்பணிகள் உள்ளிட்ட ரூ.5.99 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்த நிகழ்ச்சிகளில் பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.சிற்றரசு, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பழனி சரகம்) திரு.செந்தில்வேல் பாண்டியன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பிரபாகரன், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.



