மூடு

நல வாரியம் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 27/02/2026

செ.வெ.எண்:-74/2025

நாள்:-26.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள், நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலவாரியத்தின் சார்பாக செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தலைவர் திருமதி.டாக்டர்.விஜிலா சத்தியானந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள், நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலவாரியத்தின் சார்பாக செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் இன்று(26.02.2026) கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தலைவர் திருமதி.டாக்டர்.விஜிலா சத்தியானந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தலைவர் திருமதி.டாக்டர்.விஜிலா சத்தியானந்த் அவர்கள் தெரிவித்ததாவது:-

கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்களுக்கு விபத்து ஈட்டுறுதித் திட்ட உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி செலவுத்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இதுவரை 350 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.27,000 மதிப்பீட்டில் 8 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு உதவித்தொகை கோரி கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை பயனாளிகளுக்கு பெற்று வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையினை பயனாளிகள் இணைய வழியில் பதிவு பெற்று பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் வயதான கிறித்துவ வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவரை பதவி வழித்தலைவராக கொண்டு கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் மூலம் கிறித்துவ மகளிர்களுக்கு சிறுவணிக உதவி, முதியோர் உதவித் தொகை, மருத்துவ உதவி மற்றும் பிற பொருளாதார உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் இதுவரை 653 பயனாளிகளுக்கு ரூ.120.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, அரசின் மூலம் நிதியுதவி பெறப்பட்டு கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேவாலயங்களுக்கு இதுவரை ரூ.46.00 இலட்சம் மதிப்பீட்டில் நிதியுதவி பெறப்பட்டு பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தொன்மையான தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு அரசின் மூலம் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் நிதியுதவி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் நலவாரியத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தலைவர் திருமதி.டாக்டர்.விஜிலா சத்தியானந்த் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள், நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலவாரியத்தின் சார்பாக செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் 28 உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு புதிய நலவாரிய அட்டைகளும் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 110 பயனாளிகளுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலையினையும் கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தலைவர் திருமதி.டாக்டர்.விஜிலா சத்தியானந்த் அவர்கள் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ஜெயபாரதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.க.சுகுமார், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு. ஜி.ட்டி. ஸ்ரீராகவ் பாலாஜி, கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்கள் திரு.ஐ.ரோஸ்லின் ஜீவா, திரு.பி.பிரபாகர், மறைதிரு.வி.பிரேம் கிறிஸ்துதாஸ், திரு.எம்.இமானுவேல் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.