மூடு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன்,இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 22/08/2024
.

செ.வெ.எண்:-51/2024

நாள்:-17.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன்,இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி கூட்டரங்கில் இன்று(17.08.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 24.08.2024 மற்றும் 25.08.2024 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது. ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும் உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகயால் தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுவதால் 10 இடங்களில் உணவு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தூய்மையினை பராமரித்திட பழனி நகராட்சியின் சார்பில் 200 இடங்களில் குப்பை சேகரிக்கும் தொட்டி வைக்கப்பட்டும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உணவு கூடங்கள் மற்றும் பொது இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பழனி நகராட்சி பகுதியில் சாலைகள் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. பேரூராட்சி பகுதியில் உள்ள இணைப்பு சாலைகளில் அறிவிப்பு பலகைகள் மற்றும் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்ட்டுள்ளது. பற்றாக்குறையின்றி போதுமான அளவில் குடிநீர் வழங்கப்படவுள்ளன. மாநாடு நடைபெறும் சமையத்தில் 17 இடங்களில் பொது சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. சுழற்சி முறையில் 34 குழுக்கள் பணியாற்றவுள்ளன. 14 இடங்களில் அவசர ஊர்திகள் (AMBULANCE) தயார்நிலையில் வைக்கப்படவுள்ளது. பொது சுகாதாரத்துறையின் மூலம் உணவு கூடங்களை கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அனைத்து உணவு விடுதிகளையும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு பகுதிகளில் 6 இடங்களில் உணவு தாயர் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் 6 இடங்களில் சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு தயார் செய்யபடுவதை ஆய்வு செய்து தரமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்திட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைப்பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தபட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீயணைப்பு வாகனம் நிறுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம், அரங்குகள், பந்தல், மேடை ஆகியவற்றினை பரிசோதித்து அதன் நிலைத்தன்மை குறித்து பொதுபணித்துறையினர் சான்றிதழ் வழங்கிடவும், பொதுப்பணித்துறை மின்த்துறை பணியாளர்கள் தேவையான இடங்களை பரிசோதித்து, அதன் நிலைத்தன்மை குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் தேவைப்படும் நிலையில் மாற்றம் செய்து, அதன் பாதுகாப்பு தன்மை குறித்தும், மின்சாரம் சீரான நிலையில் வழங்கும் நிலை குறித்தும் சான்றிதழ் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மின் மற்றும் மின்பகிர்மான கழகத்தினர் மின் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து தடையின்றி மின் விநியோகம் செய்யும் பணியினை உறுதி செய்திட வேண்டும். சீரான மின்அழுதத்தில் மின் விநியோகம் செய்வதனை உறுதி செய்திட வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையினர் தேவைப்படும் இடங்களில் குடிநீர் வழங்க உறுதி செய்ய வேண்டும். குளோரின் கலந்த குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க உறுதி செய்திட வேண்டும். மாநாட்டிற்கு வருகை தரும் பக்தர் மற்றும் பொதுமக்களுக்கு தரமான குடிநீர் வழங்கிட அதற்கு உரிய அலுவலர்களை நியமித்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு வரும் பக்தர்கர்களுக்கு 20 சக்கர நாற்காலி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு தன்னார்வளர்கள் 20 நபர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றுவார்கள். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையத்திலிருது மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து செல்வதற்கு 10 பேட்டரி கார் பயன்படுத்தப்படவுள்ளது..

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் சுற்றுலாத்தறையின் மூலம் வழங்கப்படவுள்ளது. இம்மாநாட்டிற்கு வரும் பொதுமக்களை ஒழுங்குபடுத்திடவும், பாதுகாப்பினை உறுதி செய்திடவும் எவ்வித சிரமமின்றி வந்து செல்வதனை உறுதிப்படுத்திடும் வகையில் தேவையான காவலர்களை நியமிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட 168 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 226 இடங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 78 இடங்களில் மராமத்துப்பணிகள் ரூ.12.84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். விழாவிற்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக 600 முதல் 1000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகனம் நிறுத்துமிடம் தாயர் நிலையில் வைக்கபட்டுள்ளது. பொதுமக்கள் விழா நடைபெறும் இடங்களை கண்டுகளிப்பதற்கு 22 இடங்களில் எல்இடி திரை வசதி ஏற்படுத்தப்படுகிறது.

அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தாங்களே முன்நின்று இருந்து பணிகளை மேற்கொள்வதன் மூலம் எவ்வித தொய்வின்றி செய்திட முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு அரசின் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எளிதில் சென்றடையும். பொதுமக்கள் எளிதான முறையில் வந்து செல்ல வழிவகுக்கும். அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் திரு.பி.என்.ஸ்ரீதர்,இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார்,இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.கோட்டைக்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் திரு.செ.மாரிமுத்து, திரு.ச.இலட்சுமணன். திரு.கார்த்திக் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.