மூடு

அமேசான் வலைசேவைகள் மறுதொடக்கம் – செயற்கை நுண்ணறிவு – தாட்கோ.

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026

செ.வெ.எண்:-47/2026

நாள்:-16.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலைசேவைகள் மறுதொடக்கம் – செயற்கை நுண்ணறிவு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலைசேவைகள் மறுதொடக்கம் – செயற்கை நுண்ணறிவு (Amazon Web Services re/Start – AI Programmer) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டுவருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுவரை உள்ளவர்களாகவும், ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இப்பயிற்சியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

இப்பயிற்சிக்கான காலஅளவு இரண்டு மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கிபடிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் . இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.