மூடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் யுபிஎஸ்சி(UPSC)-2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 13/09/2024

செ.வெ.எண்:- 33/2024

நாள்:-12.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் யுபிஎஸ்சி(UPSC)-2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) டாக்டர் அம்பேத்கார் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு ஒரு வருட காலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் யுபிஎஸ்சி(UPSC) முதல்நிலை தேர்வுக்கான (Preliminary Exam) பயிற்சியினை வழங்க உள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் (UPSC) தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணாக்கர்கள் (Screening test மூலம்) தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களை நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணாக்கர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களாக இருத்தல் வேண்டும். இப்பயிற்சிக்கான ஒருவருடம் காலம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையினை தாட்கோ நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.