மூடு

இந்திய விமானப்படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர்வாயு தேர்வில் கலந்துகொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2024

செ.வெ.எண்:-39/2024

நாள்:-20.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

இந்திய விமானப்படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர்வாயு தேர்வில் கலந்துகொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய விமானப்படையால்(INDIAN AIRFORCE) 2024-25-ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள அக்னிவீர்வாயு தேர்வில் கலந்துகொள்வதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான அறிவிப்பில் பனிரெண்டாம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டயப் படிப்பு அல்லது தொழில் படிப்புகள் கொண்ட கல்வித் தகுதியும், 03.07.2004 முதல் 03.01.2008 வரையான பிறந்த தேதியினைக் கொண்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் இத்தேர்வில் பங்கு பெறலாம். மேலும் முழுமையான விவரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இத்தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைநாடுநர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.