மூடு

“கனவுகள் மெய்ப்படும்” – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்புரை.

வெளியிடப்பட்ட தேதி : 06/03/2026

செ.வெ.எண்:-30/2026

நாள்: 06.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலிருந்து “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியினை தமிழகம் முழுவதும் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியல் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலிருந்து “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியினை இன்று (06.03.2026) தமிழகம் முழுவதும் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் இன்று (06.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியல் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் தொலைநோக்குப் பார்வை – 2030” (Vision 2030) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் கடந்த 5 ஆண்டுகால சாதனை விளக்கக் கையேடு ஆகிய புத்தகங்களை அனைவர் முன்னிலையிலும் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 09.01.2026-அன்று செயல்படுத்தப்பட்ட “உங்க கனவச் சொல்லுங்க” திட்டத்தின் தொடர்ச்சியாக, இன்றைய தினம் “கனவுகள் மெய்ப்படும்” என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியினை தமிழகம் முழுவதும் காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.  .

அதன்படி, “மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடம் இருந்து கற்றுக்கொள்” என்ற அண்ணாவின் வாக்கிற்கிணங்க, தமிழகம் முழுவதும் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் கீழ், சுமார் 1.80 கோடி குடும்பங்களின் எதிர்கால கனவுகளையும், அதுபோல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொலைநோக்கு-2030 திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக என் ஊர் என் கனவு என்ற புதிய திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 06.02.2026 அன்று தொடங்கி வைத்தார்கள்.

அதனடிப்படையில் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியினை மையாகக் கொண்டு 38 மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், வணிகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசு அலுவலர்கள், வல்லுநர்கள், சாதனையாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனத்தாரிடமிருந்து பெறப்பட்ட ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும், மேலும், இளைஞர்களின் எதிர்கால கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் என் கனவு என் எதிர்காலம் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் இளைஞர் சக்திகளின் கனவுகளையும், தமிழ்நாடு-2030 எட்டு துறைசார் தொலைநோக்குத் திட்டங்களை செயலாக்கம் செய்யும் விதமாக கருப்பொருள் வல்லுநர்களிடம் ஆலோசனைகளையும், அயலகத் தமிழர்களின் நலன் காக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்துதற்கு 70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அயலகத் தமிழர்களின் கனவுகள் என தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு முன்னெடுப்புகள் மூலமாக அனைத்துத்தரப்பு மக்களிடமிருந்து, ஆக்கபூர்மான கருத்துக்களையும், எதிர்கால கனவுகளையும் கேட்டறிந்து, தொலைநோக்கு திட்டம் 2030-ஐ அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் வெளியிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கடந்த 04.02.2026-அன்று பி.எஸ்.என்.ஏ கல்லூரியிலேயே நடைபெற்ற “உங்க கனவச் சொல்லுங்க” நிகழ்வில் பெறப்பட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வீட்டு வசதி மற்றும் இணைப்பு, தொழில் வளர்ச்சி, விவசாயம், சுற்றுலா, மாற்றுத்திறனாளிகள் நலன், தோட்டக்கலை, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் வனத்துறை போன்ற துறைகளின் ஆலோசனையின் அடிப்படையிலும், மக்களிடமிருந்து பெறப்பட்ட உன்னதமான கனவுகளை ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் தொலைநோக்குப் பார்வை – 2030” (Vision 2030) கையேட்டினையையும், திண்டுக்கல் மவாட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வடிவமைக்கப்பட்ட 5 ஆண்டுகால சாதனை விளக்கக் கையேடு ஆகிய புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் அனைவர் முன்னிலையிலும் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் /மேலாண்மை இயக்குநர் திருமதி.சுபாஷினி, பழனி அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. பாரதி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.