கலெக்டர் ஆய்வு – “ஜல் ஜீவன் மிஷன் திட்டம்”
செ.வெ.எண்: 55/2025
நாள்: 20.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
கேதையுறும்பு தேவர் மலை குட்டத்துப்பட்டி மற்றும் புளியராஜக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையுறும்பு, தேவர் மலை, குட்டத்துப்பட்டி மற்றும் புளியராஜக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடு குறித்து இன்று (20.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையுறும்பு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.544.09 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையத்தையும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட தேவர் மலையில் ரூ.544.09 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் (17,70,000 லிட்டர் கொள்ளலவு) மற்றும் புளியராஜக்காபட்டியில் ரூ.544.09 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நீர் உந்து நிலையத்தையும், குட்டத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெயிலடிச்சான்பட்டியில் ரூ.544.09 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் (60,000 லிட்டர் கொள்ளலவு) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
காவிரி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கோவிலூர் நீருந்து நிலையத்திலிருந்து ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 916 உட்கடை கிராமங்களுக்கு புதியதாக 59 எண்ணம் தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள், 59 எண்ணம் மின்மோட்டார அறைகள் மற்றும் 467 மேல் நிலை நீர்தேக்க தொட்டிகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உள்ள மின்கட்டண சுமையை குறைப்பதற்காக தேவர்மலையில் 17.70 இலட்சம் லிட்டர் கொள்ளலவுள்ள பிரதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தன்னோட்ட குழாய்கள் மூலமாக ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு குடிநீர் விநியோகிக்க வடிவமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், 1141.7 கி.மீ நீளமுள்ள நீருந்து குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்து தற்போது இத்திட்டத்தில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவுபெற்று, சோதனை ஓட்டத்தில் உள்ளது. இதுநாள்வரை ரெட்டியார்ச்சத்திரம் ஒன்றியத்தில் 118 கிராமக் குடியிருப்புகளுக்கும்இ வேடசந்தூர் ஒன்றியத்தில் 85 கிராமக் குடியிருப்புகளுக்கும், வடமதுரை ஒன்றியத்தில் 28 கிராமக் குடியிருப்புகளுக்கும் மற்றும் திண்டுக்கல் ஒன்றியத்தில் 6 கிராமக் குடியிருப்புகளுக்கும் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வின்போது தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஒன்றியங்களுக்குட்பட்ட 916 உட்கடை கிராமங்களுக்கான காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மலரவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.பார்த்தசாரதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
