மூடு

கல்விக்கடன் சிறப்பு முகாம் 17.09.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025

செ.வெ.எண்:-63/2025

நாள்: 16.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

கல்விக்கடன் சிறப்பு முகாம் 17.09.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் அனைத்து பொறியியல், மருத்துவம், விவசாயம், கலை, பட்டய பொறியியல், செவிலியர், சட்டம் மற்றும் கல்விக்கடன் வேண்டிய மாணவ மாணவியர்களுக்கான கல்விக்கடன் லோன் மேளா வரும் 17.09.2025 புதன்கிழமை அன்று பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் தங்களது வங்கியின் ஸ்டால்களை அமைத்து அலுவலர்களுடன் கலந்து கொள்கின்றனர். எனவே கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கல்விக்கடன் முகாமில் பங்கேற்கலாம். மேலும் இம்முகாமில் இடம்பெறும் இசேவை மையம் வாயிலாகவும் விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

கல்விக்கடன் லோன் மேளாவில் பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்விக்கடன் வழங்கும் ஆணை பிறப்பிக்கப்படும். முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் விண்ணப்ப நகல், மாணவர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 3 Nos. வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், இருப்பிடச்சான்று. வருமானச்சான்று, சாதிச்சான்று நகல்கள், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட கல்விக்கட்டண விபரம். 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, முதல் பட்டதாரி எனில் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணை ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

இந்த கல்விக்கடன் லோன் மேளாவில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்

.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.