மூடு

குட்டத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/12/2024
.

செ.வெ.எண்:-11/2024

நாள்:-05.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

குட்டத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், குட்டத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(05.12.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவிகளுக்கு மொபைல் ஆஃப் மூலம் நடத்தப்பட்ட கணிதப் பாட வளரறி மதிப்பீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், 1,2,3 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறனை பரிசோதித்தார். மாணவ, மாணவிகள் உருவாக்கிய செயல்திட்ட வடிவமைப்புகள், சமூக அறிவியல் வண்ண வரைபடங்கள், பதப்படுத்தப்பட்ட தாவர மாதிரிகள், மயில், மீன், விலங்குகள் அட்டை ஓவியங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளை பாராட்டினார்.

மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் எத்தனை மாணவ, மாணவிகள் உள்ளனர் என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். காலை உணவு வழங்கப்படுவது குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் சமையல் கூடம், பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் துாசு இல்லாமல் சுத்தமாக உள்ளதா, கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

குட்டத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலை உணவுத் திட்டத்தில் உணவுகளை மாணவ, மாணவிகளுக்கு தரமாக, சுகாதாரமானதாக தொடர்ந்து வழங்க வேண்டும், பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கிருஷ்ணன், திரு.மலரவன், துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.