மூடு

குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்கள் “முன்மாதிரியான சேவை விருதுகள்” பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

செ.வெ.எண்:-10/2025

நாள்:-02.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்கள் “முன்மாதிரியான சேவை விருதுகள்” பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்” ரூ.4 லட்சம் செலவினத்தில் குழந்தைகள் தினத்தன்று(நவம்பர் 14) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகள் அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

இவ்விருதுகளுக்கு உரிய வழிமுறைகள், தகுதிகள் மற்றும் குறியீடுகளின்படி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவினர் மூலம் தேர்வு செய்யப்பட்டு உரிய பரிந்துரைகளின்படி பெறப்படும் கருத்துருக்கள் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலான தேர்வுக் குழுவினர் மூலம் தேர்ந்தெடுக்கப்படும், அதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றிற்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தகுதியான நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், பிளசிங்ஸ். பிளாட் நம்பர்.4, SPR நகர், 2வது குறுக்கு தெரு, மாவட்ட ஆட்சியரகம் அஞ்சல், திண்டுக்கல் 624 004 என்ற முகவரிக்கு 08.08.2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.