மூடு

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை(ஜுன் 12-ஆம் தேதி) முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 14/06/2024
.

செ.வெ.எண்:-22/2024

நாள்:-12.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை(ஜுன் 12-ஆம் தேதி) முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் இன்று(12.06.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை(ஜுன் 12-ஆம் தேதி) முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

அதன்படி, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க, அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

”இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும், உளமாற உறுதி கூறுகிறேன்” என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க, அரசு அலுவலர்கள் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அனுசுயா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் திரு.மாயகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சத்தியநாராயணன், நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.தனுஸ்கோடி, ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுகந்தா, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.