கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செ.வெ.எண்: 32/2025
நாள்: 08.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (08.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட பி.எல்.செட் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட ஜுவா நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2021-2022)-ன்கீழ் ரூ.16.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினையும், மேல்பள்ளம் கிராமத்தில் 15-வது நிதிக்குழு (2023-2024)-ன்கீழ் ரூ.47.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார கூடுதல் கட்டடத்தையும், கோம்பைகாடு பகுதியில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் (2025 – 2026)-ன்கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் மொத்தம் ரூ.9.6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மேலும், வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளியினையும், நபார்டு – கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டம் (NABARD RIDF XXX – 2024 -2025)-ன்கீழ் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் கோம்பைக்காடு முதல் செம்பிரான்குளம் வரை அமைக்கப்பட்டு வரும் தார்சாலைப் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.பாபு, கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபாராஜமாணிக்கம் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.