மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கியது.

வெளியிடப்பட்ட தேதி : 19/06/2024
.

செ.வெ.எண்:-33/2024

நாள்:-18.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கியது.

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இன்று(18.06.2024) தொடங்கியது. நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம், வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று(18.06.2024) முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களைப் பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய பயன்களை பயனாளிகளுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றைய தின(18.06.2024)ம், நத்தம் வட்டம், ரெட்டியபட்டி குறுவட்டத்திற்கு உட்பட்ட முளையூர், புன்னப்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி தொகுப்பு, இடையபட்டி, சாத்தம்பாடி, லிங்கவாடி, புதூர், ரெட்டியபட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதுதொடர்பான பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது, கிராம மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையின்படி, 5 மனுதாரர்களுக்கு குடும்ப அட்டை, ஒரு மனுதாரருக்கு பட்டா மாறுதல் ஆணை ஆகியவை வழங்கப்பட்டது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் திருமதி சுகந்தி, நத்தம் பேரூராட்சி தலைவர் திரு.சேக் சிக்கந்தர் பாட்ஷா மற்றும் தொடர்புடைய பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 19.06.2024 அன்று செந்துறை குறு வட்டத்திற்கு உட்பட்ட சிரங்காட்டுபட்டி, சேத்தூர், சிறுகுடி, கோட்டையூர் , பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி, செந்துறை உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று நத்தம் குறு வட்டத்திற்கு உட்பட்ட சமுத்திராபட்டி, ஊராளிபட்டி, பூதகுடி, பண்ணுவார்பட்டி, பாலப்பநாயக்கன்பட்டி, பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டி, பன்னியாமலை, நடுமண்டலம், வேலம்பட்டி, நத்தம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

இதேபோல் பழனி வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன் தலைமையில் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(18.06.2024) தொடங்கியது. இன்றையதினம் தொப்பம்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட மரிச்சிலம்பு, கீரனூர், தொப்பம்பட்டி, வேலம்பட்டி, புளியம்பட்டி, வில்வாதம்பட்டி, மொல்லம்பட்டி, மேட்டுப்பட்டி, வாகரை, மானுார், அக்கரைப்பட்டி, புதுார், தும்பலப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து 19.06.2024 அன்று ஆயக்குடி குறுவட்டத்திற்குட்பட்ட அமரப்பூண்டி, எரமநாயக்கன்பட்டி, மேலக்கோட்டை, வேப்பன்வலசு, கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, பச்சளநாயக்கன்பட்டி, ஆயக்குடி(கிழக்கு), ஆயக்குடி(மேற்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று கோரிக்கடவு குறுவட்டத்திற்குட்பட்ட புஷ்பத்துார், கொழுமங்கொண்டான், மேல்கரைப்பட்டி, கோட்டத்துரை, மிடாப்பாடி, முத்துநாயக்கன்பட்டி, கோரிக்கடவு, கோவிலம்மாபட்டி, ராஜாம்பட்டி, தாழையூத்து ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 21.06.2024 அன்று பாப்பம்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட சித்தரேவு, காவலபட்டி, அய்யம்பாளையம், வேலுசமுத்திரம், தாதநாயக்கன்பட்டி(தெற்கு), தாதநாயக்கன்பட்டி(வடக்கு), வாடிப்பட்டி(வடக்கு), வாடிப்பட்டி(தெற்கு), ரெட்டையம்பாடி, பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னம்மாபட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 25.06.2024 அன்று நெய்க்காரப்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட சின்னக்கலையம்புத்துார், சித்திரைக்குளம், நெய்க்காரப்பட்டி, சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, இரவிமங்கலம், பெரியலையம்புத்துார், பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையம்புத்துார் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 26.06.2024 அன்று பழனி குறுவட்டத்திற்குட்பட்ட புதச்சு, பாலசமுத்திரம், சிவகிரிப்பட்டி, தட்டான்குளம், கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், அய்யம்புள்ளி, பழனி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் (மேற்கு) வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம் தலைமையில் திண்டுக்கல்(மேற்கு) வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(18.06.2024) தொடங்கியது. இன்றையதினம் ரெட்டியார்சத்திரம் குறுவட்டத்திற்குட்பட்ட குட்டத்துப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, கொத்தப்புள்ளி, சில்வார்பட்டி, அழகுபட்டி, கே.புதுக்கோட்டை, குருநாதநாயக்கனுார், சுள்ளெரும்பு ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 19.06.2024 அன்று பலக்கனுாத்து குறுவட்டத்திற்குட்பட்ட பலக்கனுாத்து, நீலமலைக்கோட்டை, கோடல்வாவி, காமாட்சிபுரம், தெத்துப்பட்டி, சிரங்காடு, தோனிமலை, கன்னிவாடிமலை(வழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று தருமத்துப்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட ஆடலுார், பன்றிமலை, சத்திரப்பட்டி, பழையகன்னிவாடி, கசவனம்பட்டி, சிந்தலக்குண்டு, தாமரைக்குளம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 21.06.2024 அன்று திண்டுக்கல்(மேற்கு) குறுவட்டத்திற்குட்பட்ட அகரம், தாடிக்கொம்பு, அணைப்பட்டி, பள்ளப்பட்டி, குரும்பபட்டி, செட்டிநாயக்கன்பட்டி, அலக்குவார்பட்டி, சீலப்பாடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

வேடசந்துார் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மாரி தலைமையில் இன்று(18.06.2024) தொடங்கியது. இன்றையதினம் எரியோடு குறுவட்டத்திற்குட்பட்ட உசிலம்பட்டி, அம்மாபட்டி, வெல்லம்பட்டி, எரியோடு, இ.சித்துார், ஸ்ரீராமபுரம், மல்வார்பட்டி, மாரம்பாடி, நல்லமனார்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 19.06.2024 அன்று வடமதுரை குறுவட்டத்திற்குட்பட்ட குளத்துார், பாடியூர், வேல்வார்கோட்டை, இராமநாதபுரம், காணப்பாடி, சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம், வடமதுரை, பெரும்புள்ளி, தென்னம்பட்டி, பிலாத்து ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று அய்யலுார் குறுவட்டத்திற்குட்பட்ட பாகநத்தம், கொம்பேறிபட்டி, சுக்காம்பட்டி, சித்துவார்பட்டி, மோர்பட்டி, கொல்லப்பட்டி, புத்துார், அய்யலுார், அ.கோம்பை, பஞ்சந்தாங்கி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 21.06.2024 அன்று வேடசந்துார் குறுவட்டத்திற்குட்பட்ட குட்டம், கல்வார்பட்டி, பாலப்பட்டி, கைத்தியன்கோட்டை, பூதிபுரம், வே.புதுக்கோட்டை, வேடசந்துார், நத்தப்பட்டி, கூவக்காபட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

நிலக்கோட்டை வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் உதவி ஆணையர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி தலைமையில் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(18.06.2024) தொடங்கியது. இன்றையதினம் நிலக்கோட்டை குறுவட்டத்திற்குட்பட்ட நரியூத்து, கோட்டூர், பச்சமலையான்கோட்டை, நிலக்கோட்டை, கோடாங்கிநாயக்கன்பட்டி, நக்கலுாத்து, சிலுக்குவார்பட்டி, நுாத்துலாபுரம், பங்களாபட்டி, சின்னமநாயக்கன்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 19.06.2024 அன்று பிள்ளையார்நத்தம் குறுவட்டத்திற்குட்பட்ட விளாம்பட்டி, எத்திலோடு, பிள்ளையார்நத்தம், முசுவனுாத்து, கூவனுாத்து, வீலிநாயக்கன்பட்டி, சிவாஞானபுரம், போடியகவுண்டன்பட்டி, குல்லிசெட்டிபட்டி, சித்தர்கள்நத்தம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று ஒருத்தட்டு குறுவட்டத்திற்குட்பட்ட மாலையகவுண்டன்பட்டி, குள்ளலக்குண்டு, கல்லடிப்பட்டி, இராமராஜபுரம், மட்டப்பாறை, ஜம்புதுரைக்கோட்டை, ஒருத்தட்டு, பள்ளபட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 21.06.2024 அன்று வத்தலகுண்டு குறுவட்டத்திற்குட்பட்ட சேவுகம்பட்டி, வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, கோம்பைபட்டி, மல்லணம்பட்டி, செங்கட்டாம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 25.06.2024 அன்று விருவீடு குறுவட்டத்திற்குட்பட்ட செக்காபட்டி, விராலிமாயன்பட்டி, சந்தையூர், ரெங்கப்பநாயக்கன்பட்டி, நடகோட்டை, குன்னுவாரன்கோட்டை, பண்ணப்பட்டி, விராலிபட்டி, விருவீடு ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

குஜிலியம்பாறை வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆத்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி தலைமையில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(18.06.2024) தொடங்கியது. இன்றையதினம் கோட்டாநத்தம் குறுவட்டத்திற்குட்பட்ட திருக்கூர்ணம், ஆர்.வெள்ளோடு, ஆலம்பாடி, கோட்டாநத்தம், தோளிப்பட்டி, தி.கூடலுார், லந்தகோட்டை, தீண்டாக்கல், கருங்கல் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 19.06.2024 அன்று பாளையம் குறுவட்டத்திற்குட்பட்ட பாளையம், கரிக்காலி, சின்னலுப்பை, உல்லியக்கோட்டை, மல்லப்புரம், கூம்பூர், ஆர்.புதுக்கோட்டை, வாணிக்கரை ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று கோவிலுார் குறுவட்டத்திற்குட்பட்ட குளத்துப்பட்டி, குடப்பம், வெம்பூர், நல்லுாரி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நாகையகோட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல்(கிழக்கு) வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி தலைமையில் திண்டுக்கல் (கிழக்கு) வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(18.06.2024) தொடங்கியது. இன்றையதினம் சாணார்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட கூவனுாத்து, வடகாட்டுப்பட்டி, விராலிப்பட்டி, தவசிமடை, எமக்கலாபுரம், டி.பஞ்சம்பட்டி, சாணார்பட்டி, கோணப்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, கோம்பைபட்டி, வேம்பார்பட்டி, ஆவிளிப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 19.06.2024 அன்று சிலுவத்துார் குறுவட்டத்திற்குட்பட்ட வீரசின்னம்பட்டி, ராகலாபுரம், ராஜக்காபட்டி, மடூர், சிலுவத்துார், வத்தலதொப்பம்பட்டி, தேத்தாம்பட்டி, வங்கமனுாத்து ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று கம்பிளியம்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி, மார்க்கம்பட்டி, வஜ்ரசேர்வைக்காரன்கோட்டை, புதுப்பட்டி, மருநுாத்து, ஜோத்தாம்பட்டி, திம்மணநல்லுார், சக்கிலியன்கொடை, கணவாய்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 21.06.2024 அன்று திண்டுக்கல்(கிழக்கு) குறுவட்டத்திற்குட்பட்ட அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, முள்ளிப்பாடி, கோவிலுார், பெரியகோட்டை, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனுாத்து, அடியனுாத்து, ஏ.வெள்ளோடு, சிறுமலை ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

ஆத்துார் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல் தலைமையில் ஆத்துார் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(18.06.2024) தொடங்கியது. இன்றையதினம், ஆத்துார் குறுவட்டத்திற்குட்பட்ட போடிகாமன்வாடி, சீவல்சரகு, ஆத்துார், பாளையங்கோட்டை, பாளைப்பட்டி, வீரக்கல், கும்மம்பட்டி, வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 19.06.2024 அன்று அய்யம்பாளையம் குறுவட்டத்திற்குட்பட்ட மணலுார், சித்தரேவு, அய்யம்பாளையம், நரசிங்கபுரம், கன்னிவாடிமலை(தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று சின்னாளபட்டி குறுவட்டத்திற்குட்பட்ட கீழக்கோட்டை, தொப்பம்பட்டி, முன்னிலைக்கோட்டை, அம்பாத்துரை, என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, கலிக்கம்பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன் தலைமையில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(18.06.2024) தொடங்கியது. இன்றையதினம், சின்னக்காம்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட கே.கீரனுார், சின்னக்காம்பட்டி, எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, குத்திலுப்பை, ஓடைப்பட்டி, ஐ.வாடிப்பட்டி, எம்.அத்தப்பம்பட்டி, நவக்காணி, மண்டவாடி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, காப்பிளியப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 19.06.2024 அன்று புலியூர்நத்தம் குறுவட்டத்திற்குட்பட்ட புலியூர்நத்தம், இடையகோட்டை, இ.கல்லுப்பட்டி, பலையப்பட்டி, ஜவ்வாதுபட்டி, ஜோகிப்பட்டி, வெரியப்பூர், புளியமரத்துக்கோட்டை, கேதையறும்பு ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று கள்ளிமந்தையம் குறுவட்டத்திற்குட்பட்ட கரியாம்பட்டி, அப்பனுாத்து, புங்கமுத்துார், அப்பிபாளையம், பாலப்பன்பட்டி, அப்பியம்பட்டி, பூசாரிப்பட்டி, கூத்தம்பூண்டி, கள்ளிமந்தயம், பருத்தியூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 21.06.2024 அன்று தேவத்துார் குறுவட்டத்திற்குட்பட்ட தேவத்துார், பொருளூர், கொத்தயம், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, புதுார், சிக்கமநாயக்கன்பட்டி, பொட்டிகாம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 25.06.2024 அன்று ஒட்டன்சத்திரம் குறுவட்டத்திற்குட்பட்ட சிந்தலவாடம்பட்டி, பெரியகோட்டை, ரெட்டியபட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, வீரலப்பட்டி, தாசரிப்பட்டி, புதுக்கோட்டை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, அத்திக்கோம்பை, காளாஞ்சிப்பட்டி, கொல்லப்பட்டி, லக்கையன்கோட்டை, வடகாடு, தங்கச்சியம்மாபட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

கொடைக்கானல் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பி.சிவராம் தலைமையில் இன்று(18.06.2024) தொடங்கியது. இன்றையதினம் கொடைக்கானல் குறுவட்டத்திற்குட்பட்ட கூக்கால், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கொடைக்கானல் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, 19.06.2024 அன்று பண்ணைக்காடு குறுவட்டத்திற்குட்பட்ட வெள்ளக்கவி, அடுக்கம், பூலத்துார், பண்ணைக்காடு, வடகவுஞ்சி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20.06.2024 அன்று தாண்டிக்குடி குறுவட்டத்திற்குட்பட்ட தாண்டிக்குடி, காமனுார், கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலுார் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.