மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 21-வது கால்நடைக் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2024
.

செ.வெ.எண்:-59/2024

நாள்:-25.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 21-வது கால்நடைக் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ராஜக்காப்பட்டி கிராமத்தில் 21-வது கால்நடைக் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.10.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்தியாவில் கால்நடைக்கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. கடந்த முறை 20-வது கால்நடைக் கணக்கெடுப்பு 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. தற்போது 2024 ஆண்டில் 21-வது கால்நடைக் கணக்கெடுப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடத்தப்படவுள்ள 21-வது கால்நடைக் கணக்கெடுப்பு புதுடெல்லியில் 25 அக்டோபர் 2024 அன்று மத்திய அரசின் கால்நடைப்பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஸ்ரீராஜிவ்ரஞ்சன்சிங் அவர்கள் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் கிராம வாரியாகவும் மற்றும் நகர்புறங்களில் வார்டு வாரியாகவும் கால்நடைக் கணக்கெடுப்பு நடைபெறும். கால்நடைகள் உள்ள மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள், இறைச்சி மற்றும் முட்டைக்கோழி பண்ணைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கோசாலைகளில் உள்ள தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த பணியினை 216 எண்ணிக்கை கால்நடைக் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 45 மேற்பார்வையாளர்கள் மேற்கொள்வார்கள். இவர்களுக்கு கால்நடைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபைல் செயலி மற்றும் இணையதள பயன்பாடுகள் குறித்து நேர்முக மற்றும் களப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், அலைபேசி எண்அவர்களிடம் உள்ள நிலஅளவு, முக்கியத்தொழில், கல்வித்தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது, பாலினம், அதன் பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு விரைவாக நடத்தப்படவுள்ளதால், உங்கள் வீடுதேடி வரும் கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் புள்ளிவிவர அலுவலர்களிடம் தக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.எம்.எஸ்.ராஜா, துணை இயக்குநர் மரு.பெ.நா.ராமநாத், உதவி இயக்குநர்கள் மரு.வெ.விஜயக்குமார், மரு.சரவணக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.