திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ உள்ளிட்ட சமூகநீதி விடுதிகளில் சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங
செ.வெ.எண்: 43/2025
நாள்: 17.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ உள்ளிட்ட சமூகநீதி விடுதிகளில் சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ உள்ளிட்ட சமூகநீதி விடுதிகளில் சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-2026-ஆம் நிதியாண்டில் பல்வேறு விதமான தொழில்களை தொடங்குவதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் 29 பயனாளிகளுக்கு ரூ.57.78 இலட்சம் மானியமும், பிரதான் மந்திரி அனுசுஸித் ஜாதி அபிஜயுதாய் திட்டத்தின் கீழ், 2025-2026-ஆம் நிதியாண்டில் 82 பயனாளிகளுக்கு ரூ.40.50 இலட்சம் மானியமும், பிரதான் மந்திரி அனுசுஸித் ஜாதி அபிஜயுதாய் திட்டத்தின் கீழ், 2025-2026-ஆம் நிதியாண்டில் 108 மகளிர் சுய உதவி பயனாளிகளுக்கு (9 குழுக்கள்) ரூ.54.00 இலட்சம் மானியமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026-ஆம் நிதியாண்டில் அயோத்திதாச பண்டிதர் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சமுதாயக் கூடம், பேவர் பிளாக், மயான அடிப்படை வசதி, போர்வெல் உள்ளிட்ட 41 பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் தாட்கோ மூலமாக தொழில் தொடங்குவதற்கு கடனுதவியும், அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு விடுதிகளில் சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.ராஜகுரு மற்றும் துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.