மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான கண்காணிப்பு அதிகாரி நியமனம்

வெளியிடப்பட்ட தேதி : 25/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) 15.03.2026-ம் அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் வாசிக்க..,