திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலா களபயணம் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,
செ.வெ.எண்:-24/2025
நாள்:-08.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலா களபயணம் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலா கள பயணம் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து இன்று(08.09.2025) துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் 11 மாணவர்கள், 21 மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள் அகியோர்கள் கொண்ட குழுவினர் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாக மையத்தில் இருந்துதான் ஸ்ரீஹரிக்கோட்டாவில் ஏவப்படும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கமைப்பு மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் எஞ்சின் மற்றும் திரவ எரிவாயு சோதனைகள் அனைத்தும் இங்கு சோதனை செய்யப்பட்டு பின்பு தான் ஸ்ரீஹரிகோட்டோவிற்கு அனுப்பப்படும். அதனை மாணவர்கள் நேரடியாக கண்டு விளக்கம் பெற்று கொண்டனர். மேலும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் இதர பாகங்களையும் அருங்காட்சியகத்தில் நேரடியாக பார்த்து தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.