திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செ.வெ.எண்:-106/2025
நாள்:-27.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கலையரங்கம் மெயின் ரோடு பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கூக்கால் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.18.90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கூக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, குழந்தைகளிடம் கற்றல் அடைவு, வாசிப்புத் திறன் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கணினி ஆய்வகம், பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிடும் ”அன்புக்கரங்கள்” திட்டம் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
மேலும், கூக்கால் அருவியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு மேம்படுத்துவதற்கு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, கூக்கால் பி.காலனியில் ஆயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின்கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மயான எரிமேடை அமைக்கும் பணிகள், சுற்றுசுவர், காத்திருப்போர் கூடம், குடிநீர் வசதி மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பூண்டு மற்றும் கேரட் பயிர் சாகுபடி செய்த விவசாயிகளை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பி.காலனியில் தோட்டக்கலைத்துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கிரீன்லேண்ட் கொய்மலர் பயிற்சி பெறும் நபர்களிடம் பயிற்சி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கொய் மலர் சாகுபடி குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துரையாடினார். மேலும், ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நியாயவிலைக்கடை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, பழம்புத்தூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊளராட்சித் துறை குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (CFSIDS) ரூ.79.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மூன்று வகுப்பறைகள் கட்டடம் கட்டுமான பணிகள் மற்றும் ரூ.18.90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, மழைமாணியினை பார்வையிட்டார்.
மேலும், கூக்கால் உட்கடை கிராமம் விடுதலை நகரில் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம் 2024-2025-கீழ் ரூ.88,500 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வீடுகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தநிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.திருநாவுகரசு, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபா ராஜமாணிக்கம், உதவி பொறியாளர்கள் திரு.தங்கவேல், திரு.பாரதி, திரு.நவீன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

Oplus_16908288

.

.

.

.