மூடு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு செ.சரவணன்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/10/2025
.

செ.வெ.எண்: 112/2025

நாள்: 29.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு செ.சரவணன்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் மலைகிராமங்களில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது சுற்றுலாவின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இந்தத் துறை செய்யக்கூடிய பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை வளர்க்கும் உலகளாவிய அணுசரிப்பு நாளாகும்.

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, தாண்டிக்குடி, வெள்ளைப்பாறை போன்ற கிராமங்களில் சுமார் 2000 முதல் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளும் குகைகளும் உள்ளன. வரலாற்றுச் சின்னங்களான இந்த பகுதிகள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இடங்களுக்கு வருகை தருகின்றனர்.

பேத்துப்பாறையில் கொடைக்கானல்-பழனி சாலையில் அமைந்துள்ள கிராமத்தில் ஆதிமனிதன் குகைகள் மற்றும் கற்திட்டைகளும், தாண்டிக்குடி மலைக் கிராமத்திலும் பல ஆதிமனித கற்திட்டைகளும், வெள்ளைப்பாறையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கற்திட்டைகள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. இந்த இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு ஏதுவாக தேவையான அடிப்படை வசதிகள். மின் விளக்குகள், சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகிய வசதிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன். இ.ஆ. அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.திருநாவுகரசு, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சாமிநாதன், உதவி பொறியாளர்கள் திரு.தங்கவேல், திரு.பாரதி, திரு.நவீன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.