திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தலைமையில், சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின
செ.வெ.எண்:-111/2025
நாள்:-26.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தலைமையில், சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (26.11.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆலோசனைப்படியும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினர், சிறுபான்மையினரின் பாதுகாப்பு, உரிமைகள், அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மையின மக்களுக்காக அவர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையின மக்களின் கருத்துக்களை கேட்டு, செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள், சிறுபான்மையினர் கல்வி நிலைய பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டன. சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த குறிப்பாக கிறித்துவர்கள், முஸ்லீம்கள், பௌத்தர்கள் போன்ற சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமூகத்தில் இருக்கின்ற வாழ்வியல் பிரச்சனைகள், நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது என தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, 30 பயனாளிகளுக்கு தலா ரூ.5600 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.1.68 இலட்சம் மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்களையும் மற்றும் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் 30 உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும், 9 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளையும் தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமாறன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

..

..