திண்டுக்கல் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து செயல்படும் ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு சேவை மனப்பான்மை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் (திண்டுக்கல் நகர், திண்டுக்கல் ஊரகம், பழனி மற்றும் கொடைக்கானல் காவல் உட்கோட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டும்) தேவை.
செ.வெ.எண்:-85/2025
நாள்:-19.11.2025
பத்திரிகை செய்தி
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து செயல்படும் ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு சேவை மனப்பான்மை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் (திண்டுக்கல் நகர், திண்டுக்கல் ஊரகம், பழனி மற்றும் கொடைக்கானல் காவல் உட்கோட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டும்) தேவை.
கல்வித் தகுதி : SSLC
உயரம்: குறைந்தது 165 செ.மீ இருக்க வேண்டும்.
வயது: 20.11.2025 அன்று 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45
வயதிற்குள் இருக்க வேண்டும்.
எவ்வித குற்ற வழக்கிலும் சம்பந்தப்படாதவராக இருக்க வேண்டும், எந்த அரசியல் அமைப்புகளிலும் சாராதவர்களாகவும் இருப்பது அவசியம், NCC மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் திண்டுக்கல் பூமார்கெட் அருகிலுள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் 20.11.2025 முதல் 24.11.2025 வரை ஐந்து நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வழங்கப்படும். இவ்விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து (மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் புகைப்படம் -2) 02.12.2025 அன்று மாலை 05 மணிக்குள் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உடல்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் 05.12.2025-அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும் உடல் தகுதி மற்றும் நேர்முகத்தர்விற்கு வரும்போது அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும். தேர்ந்தெடுக்கப்ட்ட நபர்களுக்கு 45 நாட்கள் திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு ஊர்க்காவல் படையில் இணைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.