திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் ஹெல்பிங் ஹாட்ஸ் குழு ஆகியவை இணைந்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பல்வேறு தங்குமிடங்களில் உள்ள நபர்களை அழைத்து வந
செ.வெ.எண்:-26/2025
நாள்:-12.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் ஹெல்பிங் ஹாட்ஸ் குழு ஆகியவை இணைந்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பல்வேறு தங்குமிடங்களில் உள்ள நபர்களை அழைத்து வந்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் ஹெல்பிங் ஹாட்ஸ் குழு ஆகியவை இணைந்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பல்வேறு தங்குமிடங்களில் உள்ள நபர்களை அழைத்து வந்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(12.10.2025) கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்மீக புத்துணர்ச்சி வழங்கும் வகையில் ஆன்மீக பயணம் மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹாட்ஸ் குழுவும் இணைந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் ஆகியோர் 100 நபர்களை இரண்டு சிறப்பு பேருந்து மூலம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களை பேட்டரி வாகனம் மற்றும் விஞ்ச் மூலம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறப்பு தரிசனம் வழங்கி அவர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் பழனி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் (ஹெல்பிங் ஹார்ட்ஸ்) திரு.மு.கணேஷ் அவர்கள் அவர்களுடன் அமர்ந்து உணவு அறிந்தினார்கள். அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு பிரசாதம் வழங்கி பாதுகாப்பான முறையில் மன நிறைவுடன் அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிகழ்வில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் திரு.மாரிமுத்து, பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் (ஹெல்பிங் ஹார்ட்ஸ்) திரு.மு.கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.