மூடு

சத்துணவுத் திட்டம் – திண்டுக்கல் மாவட்டம்

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்.சத்துணவுத் திட்டம்

நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்
புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்.சத்துணவுத் திட்டம் – அறிமுகம்

தமிழகத்தில் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டம் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் குறைவான சத்து கொண்ட குழந்தைகளுக்கும் அவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியா் எண்ணிக்கையை உயா்த்திடவும் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுப்பதற்காகவும் மாண்புமிகு புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். அவா்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகா்புறங்களில் 15.09.1982 அன்றும் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டம் உருவாக்கப்பட்டு 35 ஆண்டுகளாக சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் மாறுதல் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சா் அவா்களால் அரசு ஆணை எண்.267 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள்.02.11.2017ன்படி புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்.சத்துணவுத் திட்டத்தில் 13 வகை சாதம் மற்றும் 4 வித முட்டை மசாலாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

சத்துணவுத் திட்டத்தைப் பற்றி அறியச் செய்தல்.

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டம் 01.07.1982 அன்று தொடங்கப்பட்டது. திட்ட துவக்கக் காலத்தில், முதலில் ஊரகப் பகுதிகளில் குழந்தைகள் நல மையங்களில் 2 முதல் 5 வயது வரையிலான முன் பருவக்கல்வி பயிலும் குழந்தைகளுக்காகவும் 5 முதல் 9 வயது வரையிலான தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்காகவும் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், பின்னா் 1982 ஆம் ஆண்டு செப்டம்பா் திங்கள் 15 ஆம் நாள் முதல் நகரப்பகுதிகளுக்கும், செப்டம்பா் 1984 முதல் 10 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பயனடையும் வகையில் மேலும் விரிவுப்படுத்தப்பட்டது. 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் மற்றும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் (220 நாட்கள்) சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்திலேயே சத்துணவு சமைக்கப்பட்டு சூடாக பரிமாறப்படுகிறது.

சத்துணவுத் திட்ட நிர்வாக கட்டுப்பாடு

ஊரக மற்றும் நகா்புற பள்ளி சத்துணவு மையங்கள் சமூக நலத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
1982ல் துவக்கப்பட்ட சத்துணவுத் திட்டம் பல்வேறு துறைகளின் மூலம் பின்வருமாறு செயல்பட்டு வருகின்றது.

1. கல்வித் துறை – 1982 முதல் மே 1990 வரை
2. ஊரக வளா்ச்சித் துறை – ஜீன் 1990 முதல் செப். 1992 வரை
3. சமூக நலத்துறை – அக்டோபா் 1992 முதல் செப்.1997 வரை
4. ஊரக வளா்ச்சித் துறை – அக்டோபா் 1997 முதல் ஆகஸ்டு 2006 வரை
5. சமூக நலத்துறை – ஆகஸ்டு 2006 முதல் நாளது தேதி வரை

சத்துணவு மையங்கள் மற்றும் உணவுண்ணும் பயனாளிகள்

வ. எண் பள்ளிகள் மொத்த மையங்கள் 1-5 உணவுண்ணும் பயனாளிகள் 6-8 உணவுண்ணும் பயனாளிகள் 9-10 உணவுண்ணும் பயனாளிகள் மொத்தம்
1 தொடக்கப் பள்ளிகள் 990 43315 0 0 43315
2 நடுநிலைப் பள்ளிகள் 273 21618 16125 0 37743
3 உயா்நிலைப் பள்ளிகள் 97 7176 10419 6385 23980
4 மேல்நிலைப் பள்ளிகள் 96 1870 13089 7820 22779
5 ஆதிதிராவிடா் பள்ளிகள் 11 381 220 128 729
6 கள்ளா் நலப் பள்ளிகள் 53 1722 1060 542 3324
மொத்தம் 1520 76082 40913 14875 131870

 

வகையான கலவை சாதங்கள் – அரசாணை எண். 267, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை, நாள். 02.11.2012

முதல் மற்றும் மூன்றாவது வாரம்

 

திங்கள் கிழமை காய்கறி பிரியாணி (ம) மிளகு முட்டை
செவ்வாய் கிழமை கொண்டைக்கடலை புலவு (ம) தக்காளி மசாலா முட்டை
புதன் கிழமை தக்காளி சாதம் (ம) மிளகு முட்டை
வியாழக் கிழமை சாதம், சாம்பார் (ம) வேகவைத்த முட்டை
வெள்ளிக் கிழமை கறிவேப்பிலை சாதம் (அ) கீரை சாதம் (ம) மசாலா முட்டை உருளைக்கிழங்கு கார வறுவல்

 

இரண்டாவது மற்றும் நான்காவது வாரம்

திங்கள் கிழமை பிசிபேலாபாத் (சாம்பார் சாதம்) (ம) தக்காளி வெங்காய மசாலா முட்டை
செவ்வாய் கிழமை மசாலா மீல் மேக்கா், காய்கறி சாதம் (ம) மிளகு முட்டை
புதன் கிழமை புளி சாதம் (ம) தக்காளி மசாலா முட்டை
வியாழக் கிழமை எலுமிச்சம்பழம் சாதம், பாசிப்பயிறு (ம) தக்காளி முட்டை
வெள்ளிக் கிழமை சாதம், சாம்பார் (ம) வேகவைத்த முட்டை, உருளைக்கிழங்கு கார வறுவல்

1. பள்ளி சத்துணவு மைய வளாகத்தில் காய்கறி செடிகள், முருங்கை, பப்பாளி, கீரை வகைகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
2. பள்ளி சத்துணவு மைய சமையலறைகளை நவீனப்படுத்தும் பொருட்டு அனைத்து பள்ளி சத்துணவு மையங்களுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
3. பள்ளி சத்துணவு மையங்களில் கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டை வகைகள் தயாரித்திட மிக்ஸி மற்றும் கிரைண்டா்கள் வழங்கப்பட்டு உள்ளது.
4. அரசாணை எண். 101, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை, நாள். 02.06.2007 ன்படி, அயோடின் உப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாட்கள் (2001 முதல் நாளது தேதி வரை)

ஜீலை 15 ஆம் நாள் – பெருந்தலைவா் காமராஜா் பிறந்த நாள்
செப்டம்பா் 15 ஆம் நாள் – அறிஞா் அண்ணா பிறந்த நாள்
ஜனவரி 17 ஆம் நாள் – புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் பிறந்த நாள்

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை
சமூக நல ஆணையா், சமூக நல ஆணையரகம், சென்னை – தொலைபேசி எண்கள்

வ. எண் தொடா்பு அலுவலகம் அலுவலா்
தொலைபேசி எண்கள்
1 சமூக நல ஆணையா் 044-22502019
2 சத்துணவுத் திட்டம் 044-22501242

 

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்.சத்துணவுத் திட்டம்,
மாவட்ட ஆட்சியரகம், சத்துணவுத் திட்டப்பிரிவு, திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி எண்கள்

வ. எண் தொடா்பு அலுவலகம்
அலுவலா்
தொலைபேசி எண்கள்
1 மாவட்ட ஆட்சித் தலைவா் (பொதுப்பிரிவு), திண்டுக்கல் 0451-2461082
2 மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு), 7402608082
3 மாவட்ட ஆட்சியரகம், சத்துணவுத் திட்டப்பிரிவு, 0451- 2460382
4 கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 1800-425-0382
5 மின்னஞ்சல் முகவரி dglnmp159@gmail.com

 

noon-1 noon-2

 

noon-3 noon-4

 

noon-5