நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
செ.வெ.எண்:-38/2024
நாள்: 13.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரமத்தலங்கள் அனைத்தும் 17.09.2024 (செவ்வாய்கிழமை) நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். என்றும், அன்றைய நாளில் மதுமானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.