மூடு

மாபெரும் தூய்மைப் பணி-2026 சிப்காட் தொழில் பூங்கா.

வெளியிடப்பட்ட தேதி : 10/01/2026
.

செ.வெ.எண்: 20/2026

நாள்: 09.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணி-2026 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சிப்காட் தொழில் பூங்காவில் இன்று(09.01.2026) மாபெரும் தூய்மைப் பணி-2026 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

”இன்றைய சுத்தம் நாளைய முன்னேற்றம்” என்ற புது மொழியைக் கருத்தில் கொண்டு சிப்காட் நிறுவன இயக்குநர் டாக்டர் கே.செந்தில் ராஜ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, ”சிப்காட் போகி” – மாபெரும் தூய்மைப்பணி -2026 என்ற பெயரில் தூய்மை பணியை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தூய்மை பணி நிலக்கோட்டை சிப்காட் தொழில் வளாகத்தில் 09.01.2026 முதல் 14.01.2026 வரை 5 நாட்களுக்கு சிப்காட் தொழில் வளாகம் முழுமையும் தூய்மைப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, சிப்காட் தொழில் பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து நடைபெற்று வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், சிப்காட் திட்ட அலுவலர் திரு.எ.சுரீஜ்பாபு, சிப்காட் சிறப்பு வட்டாட்சியர் திரு.எஸ்.வெங்கடாஜலபதி, செயற்பொறியாளர் (சிப்காட் தெற்கு மண்டலம்) செல்வி எம்.கவிதா, நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.