மூடு

பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2025

செ.வெ.எண்:-55/2025

நாள்: 13.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, SSC, LIC, IBPS, RRB, TNPSC போன்ற மத்திய, மாநில அரசுப் பணிக்கான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்பெறும் வகையில் பொதுவான பாடங்களுக்கான (Common Subjects) ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலக வளாகத்தில் 14.11.2025-அன்று முதல் துவங்கப்படவுள்ளது. மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

எனவே, போட்டித் தேர்விற்குத் தயாராகும் போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த அரியவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.