மூடு

பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 25/09/2025

செ.வெ.எண்:-30/2025

நாள்:-24.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

மத்திய அரசின் நிதி உதவி பெறும் திட்டமான நில ஆவணங்களை நவீனமயமாக்கும் (Digital India Land Records Modemization Programme-DILRMP) திட்டத்தின் கீழ், ‘நகர்ப்புற வாழ்விடங்களுக்கான தேசிய புவியிட அறிவுசார் (National geospatial Knowledge-based land Survey of urban Habitations-NAKSHA) திட்டம், (ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிப்படம் (Ortho Rectified Image-ORI) உருவாக்கப்படும்) நாடெங்கும் தெரிவு செய்யப்பட்ட 152 நகரங்கள் / மாநகரங்களில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த திண்டுக்கல் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, நகர்ப்புற வாழ்விடங்களுக்கான தேசிய புவியிட அறிவுசார் நில அளவை ‘(NAtional geospatial Knowledge-based land Survey of urban HAbitations-NAKSHA)’ திட்டத்தினை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் பொருட்டு, நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர்களை கீழ் குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு நிலஅளவை அதிகாரிகளாக நியமித்து நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரால் உத்தாவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டம், தமிழ்நாடு நிலஅளவை மற்றும் எல்லைகள் சட்டம், 1923-ன் பிரிவு6(1)-இன் அறிவிக்கையின் கீழ் திண்டுக்கல் நகர சர்வே வார்டு 1 முதல் 10 –பிளாக் மொத்தம் 201-க்கும் நவீன நகரளவைப்பணி தொடங்கப்படுகிறது என்ற விவரம் திண்டுக்கல் மாவட்ட பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.