பத்திரிக்கை செய்தி
செ.வெ.எண்:-57/2025
நாள்: 24.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்-2013 (தடுப்பு, தடை மற்றும் தீர்வு)-ன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு 31.10.2025-க்குள் அமைத்து, அதன் விவரத்தினை SHE BOX இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதன் அறிக்கையினை திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு உள்ளக புகார் குழு ஏற்படுத்தப்படாத அலுவலர்கள் (அ) நிறுவனங்களின் மீது பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்-2013-ன் விதி எண்.26-ன்படி, ரூ.50,000/- அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.