மூடு

பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 17/12/2025

செ.வெ.எண்:-43/2025

நாள்:-16.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் வடசென்னை, அம்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஒசூர், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகர், வேலூர் மற்றும் நாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.