மூடு

பல திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் – தாட்கோ

வெளியிடப்பட்ட தேதி : 10/02/2026

செ.வெ.எண்:-27/2026

நாள்:-10.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலகதர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி (Global Food & Beverage Service Eco-Tourism), உயர்தொழில்நுட்ப AI பயிற்சி (Advanced Artificial Intelligence(AI)), ஆடைவடிவமைப்பு (ம) மேலாண்மை திறன்பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை(ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் (Glam and Cosmetology Salon Management) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், உலகதர உணவுசேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி(Global Food & Beverage Service Eco- Tourism), உயர்தொழில்நுட்ப AI பயிற்சி(Advanced Artificial Intelligence(AI)), போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களாகவும் கல்விதகுதியாக பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்றவராகவும், ஆடைவடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் பயிற்சி (Glam and Cosmetology Salon Management) போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களாகவும் கல்விதகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கிபடிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் .

இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.